மாதவிடாய் நேரத்திலும் காம வெறியில் உடலுறவு! துயர வாழ்க்கையின் உச்சம்.. கண்ணீர் விட்டு கதறிய மிருணாள் தாகூர்!
'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூர், பாலியல் தொழிலாளர்களின் உச்சகட்ட துயர வாழ்க்கை பற்றி, கண்ணீருடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட தகவல், தற்போது சமூக வலைதளத்தில் மீண்டும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
Mrunal Thakur Acting Serials:
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மிருணாள் தாகூர், 2012 ஆம் ஆண்டு, ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக தன்னுடைய நடிப்பு பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர். இதை தொடர்ந்து, மராத்தி திரைப்படத்தில் 2014-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
Mrunal Thakur Debut Love Sonia Movie:
இவரின் எதார்த்தமான நடிப்பால், கவர்த்திழுக்கப்பட்ட, இயக்குனர் சோனியா குப்தா 2018 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலாளர்கள் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட 'லவ் சோனியா' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில், மிருணாள் தாகூரை அறிமுகம் செய்தார்.
Mrunal Stay in Prostitutes
'லவ் சோனியா' திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடிக்க, சுமார் 2 வாரங்கள் பாலியல் தொழிலாளர்களுடன் தங்கி, அவர்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் துயர வாழ்க்கை பற்றி மிருணாள் தாகூர் தெரிந்து கொண்டதுடன், அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, அவர்கள் பேசும் விதம் , நடந்து கொள்ளும் விதம் என அனைத்தையும் பற்றி தெரிந்து கொண்ட பின்னரே இப்படத்தில் நடித்தார்.
Mrunal About Shocking Truth:
அப்போது அவர்கள் கூறிய பல தகவல்களை, மிருணாள் தாகூர் கண்ணீருடன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். பாலியல் தொழில் செய்யும் பெண்களின் அறைகளில் வைக்கப்பட்டிருந்த கட்டில்கள் மிகவும் உயரமாக இருந்ததாகவும், இது ஏன் என்று கேட்டதற்கு? நாங்கள் கஸ்டமர்களுடன் உறவில் இருக்கும்போது, தங்களுடைய குழந்தைகள் இந்த கட்டிலுக்கு அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் கட்டில்கள் பெரிதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்ததாகவும், இந்த பதில் தன்னுடைய மனதை மிகவும் பாதித்ததாக தெரிவித்துள்ளார்.
Leo Breaking: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு! 4 மணி காட்சிக்கு அனுமதி மறுப்பு!
Prostitute Life:
மேலும் பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அழுவதில்லையே என்றும், இந்த தொழிலை விருப்பப்பட்ட தான் செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு... எங்களைப் போன்ற பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது. நாங்கள் அழ மாட்டோம், சிரிக்க மாட்டோம், எதற்கும் கவலைப்பட மாட்டோம், எங்களுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. எங்களை காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை நாங்கள் உயிருள்ள பிணங்கள் என்று, அந்த பெண்கள் கூறியதாக அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Mrunal Thakur Painful Words:
தொடர்ந்து அந்த பெண்களுடன் பேசும் போது, அவர்கள் ஒரு நாளைக்கு 30 முதல் 40 கஸ்டமர்களுடன் உறவு கொள்வதாகவும், ஒருவருடன் உறவு வைத்து கொண்டால், ரூ. 40 கொடுப்பார்கள், சில ஆண்கள் மாதவிடாய் நேரத்தில் கூட, தங்களுடைய காமவெறியை நீக்கிக் கொள்ள தங்களுடன் உறவு கொள்வார்கள் என அந்த பெண்கள் கூறியது துயர வாழ்க்கையின் உச்சம் என மிருணாள் தாகூரை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
Sex Workers sad life story:
ஆரம்பத்தில் இப்படி ஆண்கள் நடந்து கொள்வதை பார்த்து, பார்த்து கத்தி கூச்சலிட்டோம். பின்னர் எங்களை காப்பாற்ற யாரும் மாட்டார்கள் என்பது தெரிந்தது. எனவே மனதை திடமாக்கி கொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பல பெண்கள் கூறினார்களாம்.
Mrunal Thakur Upcoming Movies:
மேலும் மிருணாள் தாகூர் பாலியல் தொழிலாளியாக 'லவ் சோனி' படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்து, அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்கவும் கமிட் ஆனார். குறிப்பாக 'சீதா ராமம்' திரைப்படம், இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர், நானிக்கு ஜோடியாக 'ஹாய் நானா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D