Navarathri: விதவிதமான சேலையில்.. நவராத்திரி கொண்டாட்டத்தை களைகட்ட வைத்த அனிதா விஜயகுமார்! வைரலாகும் போட்டோஸ்!
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா, நவராத்திரி கொண்டாட்டத்தை களைகட்ட வைக்கும் விதத்தில், எடுத்து கொண்ட... போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மருத்துவரான அனிதா விஜயகுமார், திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆன நிலையில்... சமீபத்தில் தான் மீண்டும் தன்னுடைய கணவர் மற்றும் மகன், மகளுடன் சென்னையில் குடியேறினார்.
சென்னைக்கு வந்ததில் இருந்து... டாக்டர் வேலையை விட்டு விட்டு, ஒரு மாடல் போல் விதவிதமான உடையில், செல்லும் இடமெல்லாம் ரக ரகமான புகைப்படங்களை கிளிக் செய்து விளாசி வருகிறார்.
அந்த வகையில் இவர் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 50 வயதிலும் 30 வயது பெண் போல்... அனிதா அழகு தேவதை போல் ஜொலிப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இவரின் இளமையில் ரகசியம் குறித்து, தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப... அவ்வப்போது தன்னுடைய ஃபிட்னஸ் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒர்க் அவுட் வீடியோ மற்றும் தான் எடுத்துக்கொள்ளும் ஹெல்த் ஜூஸ் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
அதே போல், எப்போதும் ஃபங்ஷன் மோடில் இருக்கும் இவரின் குடும்ப புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தோழிகளுடன் பார்ட்டி, டான்ஸ் என மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படத்தை வெளியிட்டு, பலரை பொறாமைப்பட வைக்கும் அனிதா விஜயகுமார்... தற்போது, நவராத்திரி கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
முதல் நாளான நேற்று, மாதா ஷைல்புத்திரிக்கு உயர்ந்த ஆரஞ்சு நிற சேலையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். 'ஷைல் புத்திரி' என்ற வார்த்தையின் முக்கியத்துவம், அவள் தீய சக்திக்கு எதிரானவள் என அர்த்தம். மாதா ஷைல்புத்ரியை வழிபடுவதன் மூலம், ஒருவர் அவரின் வாழ்க்கையில் வலிமையையும் தூய்மையையும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார் என்பது ஐதீகம்.
இரண்டாவது நாளான இன்று, வெள்ளை நிற சேலையில் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார். வெள்ளை நிறம் பிரம்மச்சாரிணி பார்வதி தேவியின் திருமணமாகாத வடிவத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் நீதி, தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தை குறிப்பதாக ஐதீகம்.
இப்படி ஒன்பது நாளும், நீளம், பச்சை, மஞ்சள், போன்ற ஒவ்வொரு வண்ணங்களை குறிக்கிறது. அனிதாவும் தினமும், அந்தந்த நாளின் சிறப்பை விவரிக்கும் விதத்தில் இந்த நவராத்திரியை கலர் ஃபுல்லாக கொண்டாடி மகிழ்வர் என்பது தெரிகிறது .
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D