சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் நடக்கும் 'தலைவர் 170' படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 

'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வருகிறது.

Vichu Vishwanath: பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடியில் நடக்கும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்... அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், " 'புவனா ஒரு கேள்விக்குறி' என்ற படத்திற்காக 1977ஆம் ஆண்டு இங்கு வந்தேன். அதன்பிறகு 46 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதிக்கு தற்போது தான் மீண்டும் வருகிறேன். இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அன்பானவர்கள். அவர்களை பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

Vijay: மனைவி சங்கீதா ஆசையை நிறைவேற்ற... தளபதி இப்படியெல்லாம் கூட செஞ்சிருக்காரா? வெளியான ஆச்சர்ய தகவல்!

அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம் என கூறி, தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள, 'லியோ' திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதில் அளித்த ரஜினிகாந்த் 'லியோ' மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள், அந்த படம் வெற்றி அடைய நான் ஆண்டவனை வேண்டிக்கொள்வேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது".

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D