Vichu Vishwanath: பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பிரபலமான நடிகர் விச்சு விஸ்வநாத்தின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Vichu Vishwanath Debut
தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ல் வெளியான, ‘சந்தனக்காற்று’ படம் மூலம் வில்லனாகத் திரையுலகில் கால்பதித்தவர் விச்சு விஸ்வநாத். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி எனப் பல குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
Actor More then 100 Movies:
இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், பிரபல இயக்குநர் சுந்தர் சி உடைய நெருங்கிய நண்பராவார். அவருடன் 38 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அரண்மனை, கலகலப்பு போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்களில் இவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றது.
Vichu Vishwanathan Daughter Marriage:
இந்நிலையில் இவரது மகள் கோகிலா விஸ்வநாத், தற்போது ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஶ்ரீகாந்த் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Kokila and Srikanth Marriage Date
இவர்களது திருமணம் வரும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து இருவீட்டை சேர்ந்தவர்கள், திருமண ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.