Leo: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் போடும் நிபந்தனை..! லியோ அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா?
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தற்போது இப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leo Release Works:
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்துள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க, மற்றொரு புறம் திரைப்படத்தின் ரிலீசுக்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
Lalith kumar Petition Filed:
அதே போல் இப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிட வேண்டும் என படக்குழு நீதிமன்றத்தை நாடிய நிலையில், இதற்க்கு தமிழக அரசும் அனுமதியளித்தது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக 4 மணி, 7 மணி காட்சிகள் கிடையாது என்பது உறுதியானது.
Leo Special Show:
இதை தொடர்ந்து, 'லியோ' படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'லியோ' திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே முதல் காட்சியை ஒளிபரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Leo movie Petition
இன்று மாலை 1மணியளவில் இந்த மனு விசாரிக்க பட இருந்த நிலையில், நீதிபதி அனிதா சம்பத் இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். மேலும் நாளை முதல் வழக்காக 'லியோ' மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
Producer and Theatre owners problem:
இதை தொடர்ந்து, 'லியோ' படத்தை தயாரித்துள்ள... தயாரிப்பாளர் லலித் குமார், திரையரங்கு உரிமையாளர்களுக்கு போட்டுள்ள புதிய நிபந்தை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் சொன்னது போல் லியோ ரிலீஸாகுமா? என சமூக வலைத்தளத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
Producer Agreement?
அதாவது லியோ திரைப்படம் வெளியாகி, முதல் வாரத்தில் வசூலிக்கும் வசூலில் 25 சதவீதம் தான் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் டிஸ்ட்ரி பியூட்டர்களுக்கு என்றும், 75 சதவீதம் தயாரிப்பாளருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு பல திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், இதுகுறித்து இரு தரப்பிற்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளரின் நிபந்தனைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒருவேளை சம்மதம் தெரிவிக்கவில்லையென்றால், இப்படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D