கோலி, ஃபாப் டூப்ளெசிஸ் அதிரடி ஆட்டம் – ஆர்சிபி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆஃப் செல்லுமா?
பெங்களூருவில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டி தற்போது சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே பிளே ஆஃப் சுற்றுக்கு 4 ஆவது அணியாக முன்னேறும். மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இனிமேல் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை. அப்படியே மழை பெய்தால் டக் ஒர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்படும்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 3 ஓவர்களில் ஆர்சிபி 31 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
மழைக்கு பிறகு சிஎஸ்கே ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்தது. மேலும் ஸ்பின் ஓவர்களில் ஆர்சிபி வீரர்களால் ரன்கள் அடிக்கவே முடியவில்லை. இதற்கு காரணம் பந்து திரும்பியது, கிரிப் ஆகியவற்றின் காரணமாக ரன்கள் அடிப்பது சிரமமாக இருந்தது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
எனினும், விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் கஷ்டப்பட்டு ஓவருக்கு ஒரு பவுண்டரி என்று அடித்தனர். இதில், விராட் கோலி 29 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் ஆர்சிபி 78 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், ஃபாப் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
அடுத்து ரஜத் படிதார் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், படிதார் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 14 ரன்களில் வெளியேற, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக கேமரூன் க்ரீன் 38 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இந்த போட்டியைப் பார்ப்பதற்கு ஆர்சிபி மகளிர் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், நடிகர் ரிஷப் ஷெட்டி, ஆர்சிபி முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் ஆகியோர் நேரில் வருகை தந்துள்ளனர்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, 68th Match
இந்த நிலையில் தான் கன்னட நடிகரும், ஆர்சிபியின் தீவிர ரசிகருமான ஷிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இன்று நமது ஆர்சிபி அணி வெற்றி பெறும் என்று ஆர்சிபி ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.