MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஆனந்த் அம்பானி - ராதிகா ப்ரீ வெட்டிங் திருமண கொண்டாட்டத்தில் மகள் - மனைவியுடன் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

ஆனந்த் அம்பானி - ராதிகா ப்ரீ வெட்டிங் திருமண கொண்டாட்டத்தில் மகள் - மனைவியுடன் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவரான, முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள, நடிகர் ரஜினிகாந்த் மகள் மற்றும் மனைவியுடன் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

3 Min read
Author : manimegalai a
Published : Mar 03 2024, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

பிரபல தொழிலதிபரும், இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மகன்.. ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமணம் ஜூலை மாதம் நடக்க இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211

இந்நிலையில் இவர்களின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல், 3ஆம் தேதி வரை தொடர்ந்து (3 நாட்கள்) நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிய நிலையில், இதில் ஏராளமான திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சர்வதேச பிரபலங்கள்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!

311

குறிப்பாக நடிகர் ஷாருக்கானின் குடும்பம், ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி, நடிகர் சைப் அலிகான் மற்றும் அவருடைய மனைவி கரீனா கபூர், விளையாட்டு வீரர் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி, நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர், நடிகர் அக்ஷய் குமார்,  அமீர் கான், சல்மான் கான், போன்ற ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

411

அதே போல் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மகள் டிவாகா ட்ரம்ப், டாடா குழும தலைவர் சந்திரசேகரன், கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக்,  டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர், சுந்தர் பிச்சை, மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் மற்றும் அவரின் மனைவி பிரிஸில்லா உள்ளிட்ட பல் தொழிலதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Tamannaah: திருமணத்திற்கு முன்பே... கழுத்தில் மாலையோடு காசி விஸ்வநாதரை வழிபட்ட தமன்னா! வைரலாகும் போட்டோஸ்!

511

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தன்னுடைய மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் குஜராத்தின், ஜாம்நகர் பகுதிக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

611

அம்பானியின் வீட்டு ப்ரீ வெட்டிங் விசேஷத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் எளிமையாக டீஷர்ட் மற்றும் லோயருடன் வந்து பலரையும் வியக்க வைத்துள்ளார். ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்தும் எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி, மிகவும் எளிமையான காட்டன் சல்வார் உடுத்தியுள்ளார். ஐஸ்வர்யா மட்டும் கொஞ்சம் மாடனாக ஆக ஜீன்ஸ், டீ -ஷர்ட் மற்றும் கூலஸ் அணிந்து காணப்படுகிறார்.

SJ Suryah: ராஜுமுருகன் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய எஸ்.ஜே.சூர்யா! புது ஹீரோ யார் தெரியுமா?

711

இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளது பல ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

811

இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் மட்டும், அம்பானி சுமார் 2000திற்கும் மேற்பட்ட மிகவும் பிரபலமான மனிதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்பா பக்கத்தில் இருக்கும் போதே... என் டீ ஷர்டுக்குள் கை விட்டான்! மோசமான அனுபவத்தை கூறிய நடிகை ஆண்ட்ரியா!

911

அதை போல் இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் சுமார் 2500 வகையான உணவு வகைகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும்... ஒரு தடவை செய்த உணவையும் மீண்டும் ரிப்பீட் செய்யக்கூடாது என்ற கட்டளையையும் அம்பானி விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

1011

தன்னுடைய கடைசி மகனின் திருமண கொண்டாட்டத்தை 4 மாதத்திற்கு முன்பே துவங்கி... காசை தண்ணீர் போல் செலவு செய்து வருகிறார் முகேஷ் அம்பானி. கடைசியாக நடந்த இவரின் மகள் இஷா அம்பானி திருமணத்திற்கு 800 கோடி செலவு செய்த அம்பானி, இந்த திருமணத்தை ஆயிரம் கோடி செலவில் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Atlee: அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மனைவி மகனோடு கலந்து கொண்ட அட்லீ!

1111

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய குடும்பத்துடன் நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று வந்திருப்பது கூடுதல் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஆமிர் கான்
முகேஷ் அம்பானி
ராதிகா மெர்ச்சண்ட்
சச்சின் டெண்டுல்கர்
ஷாருக் கான்
பாலிவுட்
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved