MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Yuvan: பட வாய்ப்பை பிடிக்க விஜய் டிவி சீரியலில் கதாநாயகனாக களமிறங்கும் மயில்சாமி மகன்! ஹீரோயின் யார் தெரியுமா?

Yuvan: பட வாய்ப்பை பிடிக்க விஜய் டிவி சீரியலில் கதாநாயகனாக களமிறங்கும் மயில்சாமி மகன்! ஹீரோயின் யார் தெரியுமா?

மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன், யுவன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 

3 Min read
Author : manimegalai a
Published : Dec 30 2023, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன், காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

29

ஏழை, எளிய, மக்களுக்கும்... தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து மனித நேயத்தின் சிகரமாக வாழ்ந்தவர் மயில்சாமி. தன்னால் பணம் இயலாத பட்சத்தில் கூட, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கி உதவி செய்தவர். குறிப்பாக சாலிகிராமம் பகுதியில் வாழ்ந்த பலருக்கு மிகவும் பரீட்சியமானவர்.

சன் டிவி சூப்பர் ஹிட் தொடரில் இருந்து விலகும் ஹீரோயின்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
 

39

நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன், என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் ஒரு நடிகராக பார்க்க ஆசைப்பட்டார் மயில்சாமி. அன்பு ஏற்கனவே கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார், போன்ற படங்களை இயக்கிய ராசு மதுரன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 'பார்த்தோம் பழகினோம்' என்கிற படத்தில் நடித்த நிலையில், இப்படம் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.
 

49

இதைத்தொடர்ந்த 2015 ஆம் ஆண்டு ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் 'அந்த 60 நாட்கள்' என்ற திரைப்படத்தில் கமிட் ஆனார். முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவான இப்படமும் ரிலீஸ் ஆகாமல் போனது. பின்னர் 'கொக்கு' என்கிற திரைப்படம் ஒன்றிலும் அன்பு நடித்த நிலையில், அந்த படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்படி அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெளியாமல் போனாலும் துவண்டு விடாமல் நடிகனாக சாதிக்க முயற்சி செய்து வருகிறார்.

Vijayakanth: விஜயகாந்தின் இறுதி நிமிடங்கள்! ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் கேப்டன்! போட்டோஸ்!

59

2017-ஆம் ஆண்டு, பொம்மலாட்டம் நடக்குது, திரிபுரம் போன்ற படங்களில் நடித்தார் அன்பு. அந்த படங்களும் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுமார் 9 வருட போராட்டத்திற்கு பின்னர், அன்பு ஹீரோவாக நடித்த அல்டி என்கிற திரைப்படம், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு ரிலீசான 'சிதம்பரம் ரயில்வே கேட்' என்கிற படத்திலும் அன்பு மயில்சாமி நடித்திருந்தார்.

69

அண்ணன் அன்புவை தொடர்ந்து, அவரது தம்பியும்... மயில்சாமியின் இரண்டாவது மகனுமான, யுவனும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார். அந்த வகையில், 2016 ஆம் ஆண்டு வெளியான 'தணியும்' என்கிற திரைப்படத்தில் யுவன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Bigg Boss Eviction: இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது இவரா? தப்பிய நிக்சன் சிக்கியது யார் தெரியுமா?

79

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'தண்டக்காரன்யம்' என்கிற படத்தில் யுவன் நடித்து வருகிறார். பல வருடங்களாக அண்ணன் - தம்பிகள் இருவருமே திரையுலகில் சாதிக்க போராடி வரும் நிலையில், யுவன் தற்போது வெள்ளி திரையில், இடம் பிடிக்க சின்ன திரையை ஒரு களமாக மாற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஹீரோவாக கமிட் உள்ளார்.
 

89

யுவன்  மயில்சாமி நடிக்க உள்ள சீரியலுக்கு 'தங்கமகள்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த சீரியலின் சூட்டிங் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், யுவனின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலில் யுவனுக்கு ஜோடியாக...  ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு சீரியலில் கதாநாயகியாக நடித்த அஸ்வினி ஜோடியாக நடிக்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

99

சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்கி, ரியோ, பிரஜின், கவின், போன்ற சில இளம் நடிகர்கள் வெள்ளித்திரையில் ஹீரோவாக மாறியுள்ளனர்... அதே போல் யுவன் மயில்சாமியும் நிலையான இடத்தை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved