MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijayakanth: விஜயகாந்தின் இறுதி நிமிடங்கள்! ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் கேப்டன்! போட்டோஸ்!

Vijayakanth: விஜயகாந்தின் இறுதி நிமிடங்கள்! ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் கேப்டன்! போட்டோஸ்!

கேப்டன் விஜயகாந்தின், இறுதி சடங்கில் ஊர்வலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், அவரின் உடல் அரசு மரியாதையுடன் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் இதோ... 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 29 2023, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

மனிதனால் பறக்க முடியுமா...?  அப்படியே பறப்பது  போல் படங்களில் காட்சிகள் இடம் பெற்றாலும் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என பல சந்தேகங்கள் இருந்தாலும் இப்படி பட்ட சந்தேகங்களை தகர்த்தெறிந்து, இயற்கை தத்துவத்தை உடைத்துக் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். 

211

வலது காலை சுவற்றில் ஊன்றி... ஏறி மிதித்து அப்படியே ஆகாசத்தில் அசத்தலாக பறந்து, பின்  வில்லனின் தோளில் இறங்கி, வில்லன் மூஞ்சை விஜயகாந்த் பஞ்சர் செய்த காட்சிகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது!.

மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதன்.. மக்கள் நடமாட்டம் அதிக இருக்கும் இடத்திலேயே கேப்டனுக்கு கல்லறை..

311

குறிப்பாக க்ளைமேக்ஸில், மெயின் வில்லனை கேப்டன் புரட்டி எடுத்து புரோட்டா போடும் போது... அவரோட ரெண்டு காலுமே ஆகாசத்தில் இருக்கும், பிற மொழி படங்களில் இப்படி பட்ட காட்சிகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் கூட விஜயகாந்தின் இந்த ஃபிள்ளைங்கை ரசிக்க தவறியது இல்லை.

411

அதே போல் கோட் சூட், போட்டு கேப்டன் திரைப்படங்களில் நடித்தால்... டொனால்டு ட்ரபுக்கே டஃப் கொடுப்பார் அப்படி இருக்கும் அவரது தோரணை. கோட்டு - சூட்டில் மட்டும் அல்ல, வேட்டியை மடித்து கட்டினால் தலைவரின் ஸ்டைலே தனி ரகம் தான்.

மீளா துயில் கொள்ளப்போகும் கேப்டன்.. சந்தனப்பேழையில் இடம் பெற்று இருக்கும் வாசகங்கள் என்ன?

511

இப்படி திரையை தீப்பிடிக்கும் அளவுக்கு தன்னுடைய பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தி வந்த கேப்டன் விஜயகாந்த், உடல் நல பிரச்சனை காரணமாக அரசியலில் இருந்தும்... திரையுலகில் இருந்தும் முழுமையாக விலகினார்.

611

சில மாதங்களுக்கு முன், சீரான ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவரது கால் விரல் 3 அகற்றப்பட்டதது. இதை தொடர்ந்து கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிரிட்டிகல் கேர் யூனிட்டில் இருக்கிறார் என வெளியான செய்தி... பலரையும் கலங்க வைத்தது. 

Vijay Attacked: விஜய் மீது செருப்பு வீச்சு! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தளபதி மீது அப்படி என்ன வன்மம்?

711

கேப்டன் உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் பரவிய பொதும்... உடல் நலத்துடன் மீண்டு வந்தார். ஆனால் இந்த முறை இப்படி ஆகும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!! வழக்கமான பரிசோதனை என மருத்துவமனையில் டிசம்பர் 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு நிமோனியா கண்டறியப்பட்ட நிலையில், நேற்று காலை 6:10 மணியளவில் உயிரிழந்தார்.

811

விஜயகாந்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்து, ரசிகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில்... அரசு சார்பில், விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டது.

படிக்க காசு இல்லாமல் கலங்கி நின்ற தனுஷின் சகோதரி கார்த்திகா.! ஓடி வந்து உதவிய விஜயகாந்த்.. உருக்கமான பதிவு!

911

2 மணியளவில், தீவுத்திடலில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில்... ஊர்வலமாக எடுத்து வரவரப்பட்ட கேப்டனின் உடலில், அவரது தேமுதிக அலுவலகத்தின் முன் பகுதியில்... அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க சந்தன பேழையில் வைத்து, அடக்கம் செய்யப்பட்டது.

1011

விஜயகாந்தின் கண்ணாடி, அவரின் தங்க சங்கிலி, மோதிரம் போன்ற அணைத்து ஆபரணங்களுடனும் அடக்கம் செய்யப்பட்டது. கேப்டனின் இறுதி நிகழ்ச்சில் அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Vijayakanth: ஓவரா ஆட்டம் போட்ட வாட்டாள் நாகராஜ்! வேட்டியை மடித்து கட்டி.. இரும்பு ராடுடன் சீரிய விஜயகாந்த்!
 

1111

பசியென்று வந்தவருக்கு... பசியாற்றி, மக்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்த இந்த கருப்பு தங்கத்திற்கு ரசிகர்களும் அங்கு கூடி இருந்தவர்களும் சொல்லிலடங்கா துயருடனும், கண்ணீருடனும் விடை கொடுத்தனர்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்
மு. க. ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved