Cheapest Cars : குறைந்த பட்ஜெட் கார் வாங்க வேண்டுமா.? ரூ.5 லட்சத்திற்குள் விற்கும் சிறந்த கார்கள்..
இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு நான்கு சக்கர வாகனமாவது இருப்பது அவசியமாகிவிட்டது. நான்கு சக்கர வாகனம் வாங்க விரும்புபவர்கள் பலர் இருந்தாலும், இந்தியாவில் கிடைக்கும் நல்ல குறைந்த பட்ஜெட் கார்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Cheapest Cars
ரெனால்ட் (Renault KWID) காரின் விலை- 4.64 லட்சம் ஆகும். ரெனால்ட் வாகனங்கள் அவற்றின் தோற்றம் மற்றும் விலை காரணமாக இந்திய சந்தையில் விரும்பப்படுகின்றன. இந்த வாகனத்திற்கு நாட்டில் நல்ல கிராக்கி உள்ளது. குறைந்த விலை கார்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை நிச்சயம் தேர்வு செய்து கொள்ளலாம்.
Maruti Alto
ரூ.3.39 லட்சம் விலையில், மாருதி ஆல்டோ 2 பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் 1 சிஎன்ஜி எஞ்சினுடன் வருகிறது. பெட்ரோல் என்ஜின்கள் 796 சிசி, 1061 சிசி, சிஎன்ஜி இன்ஜின் 796 சிசி ஆகும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. ஆல்டோ வகையின் மைலேஜ் எரிபொருள் வகையைப் பொறுத்து 18.9 கிமீ/லி முதல் 26.83 கிமீ/கிகி வரை இருக்கும்.
Maruti Suzuki S Presso
மாருதி சுஸுகி எஸ் பிரஸ்ஸோ (Maruti Suzuki S Presso) விலை 3.99 லட்சம் ஆகும். S-Presso Powertrain 1.0 லிட்டர் K10B பெட்ரோல் எஞ்சின். இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு AMT உடன் வழங்கப்படுகிறது. இது தவிர இந்த கார் தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG கிட் உடன் கிடைக்கிறது. இது LXI, LXI (o) VXI (o) ஆகிய மூன்று வகைகளில் வருகிறது.
Hyundai Santro
ஹூண்டாய் சான்ட்ரோவின் விலை ரூ. 4.89 லட்சம் ஆகும். ஹூண்டாய் சான்ட்ரோ 4-சிலிண்டர், 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..