விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் சாலையில் இரு மருங்கிலும் கண்ணீருடன் லட்சக்கணக்கானோர் விஜயகாந்திற்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மியாட் மருத்துவமனையில் உயிர்விட்ட விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து இன்று காலை அவரின் காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் சாலையில் இரு மருங்கிலும் கண்ணீருடன் லட்சக்கணக்கானோர் விஜயகாந்திற்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் ” புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ நிறுவன தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் சந்தன பேழையில் இடம்பெற்றுள்ளன. 50 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளில் இந்த பிரத்யேக சந்தன பேழை தயாரிக்கப்பட்டுள்ளது.

Vijayakanth Funeral | கேப்டன் விஜயகாந்த் துயில் கொள்ளவுள்ள சந்தனப்பேழை!

மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அவரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தேமுதிக கொடி ஏந்தி திரளான தொண்டர்களும் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். தொண்டர்கள் கேப்டன் எனவும், கேப்டனுக்கு வீர வணக்கம் எனவும் முழக்கமிட்டபடி பங்கேற்றுள்ளனர்.

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், தீவுத்திடம் ஏற்பாடுகள் செலவுகளை ஏற்றது தமிழக அரசு! 200 பேருக்கு மட்டுமே அனுமதி.!