Asianet News TamilAsianet News Tamil

மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதன்.. மக்கள் நடமாட்டம் அதிக இருக்கும் இடத்திலேயே கேப்டனுக்கு கல்லறை..

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த விஜயகாந்தின் நினைவிடமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலேயே அமைய உள்ளது.

Captain Vijayakanth Death funeral vijayakanth body will buried in his own place Rya
Author
First Published Dec 29, 2023, 5:44 PM IST

ஓடி ஓடி உழைத்து, தேடி வந்தோரின் பசியாற்றி ஏழைகளின் பங்காளனாய் வாழ்ந்து வந்த விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நேற்று காலை முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது.

மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் மிதந்து செல்லும் விஜயகாந்த் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை அளித்து வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த விஜயகாந்தின் நினைவிடமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலேயே அமைய உள்ளது. ஆம். கோயம்பேடு என்பது எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் ஒரு இடமாகும். ஆண்டின் எல்லா நாட்களிலுமே  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வருவதும் புறப்படுவதுமாக உள்ளது.

இதனால் மக்களுக்கு மத்தியிலேயே விஜயகாந்த் மீளா துயில் கொள்ளப்போகிறார். விஜயகாந்த் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட நிலத்தில் அவரின் கல்லறை அமைய உள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு விரைவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது. மேலும் கட்சி அலுவலக வளாகத்திற்குள் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான பணிகள் 15 நாட்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மீளா துயில் கொள்ளப்போகும் கேப்டன்.. சந்தனப்பேழையில் இடம் பெற்று இருக்கும் வாசகங்கள் என்ன?

இதனிடையே திரளான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அவரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios