MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijay Attacked: விஜய் மீது செருப்பு வீச்சு! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தளபதி மீது அப்படி என்ன வன்மம்?

Vijay Attacked: விஜய் மீது செருப்பு வீச்சு! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தளபதி மீது அப்படி என்ன வன்மம்?

நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த, தளபதி விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 29 2023, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரை உலகில் வில்லனாக அறிமுகமாகி ஒரே ஆண்டில் கதாநாயகனாக மாறி ஜொலித்தவர் விஜயகாந்த். நடிப்பு, தயாரிப்பு, என இரண்டு குதிரையிலும் வெற்றிகரமாக பயணம் செய்த விஜயகாந்த், நடிகர் சங்க தலைவராகவும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார்.
 

26

குறிப்பாக நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது, நட்சத்திர நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, நடிகர் சங்கத்தை மீட்ட பெருமை விஜயகாந்தை மட்டுமே சேரும். மேலும் இவர் தயாரிப்பாளராக இருந்தபோது, 'நான் சாப்பிடும் உணவை, மற்ற தொழிலாளர்களும் சாப்பிட வேண்டும் என அனைவருக்கும் கறி விருந்து கொடுத்தவர்". இதன் பின்னரே மற்ற தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களுக்கும் நல்ல உணவை கொடுக்க முன் வந்தனர்.

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்! உணர்வு பொங்க இரங்கல் தெரிவித்த ராதிகா!
 

36

இப்படி திரையுலகில் பல்வேறு மாற்றங்களையும், சாதனைகளையும் நிகழ்த்திய விஜயகாந்த்... அரசியலிலும் அதிரடியாக களமிறங்கி, எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார்.  இவர் திரை உலகில் இயக்குனராகவும், நடிகராகவும், சுமார் 54 கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இவர்களில் ஆர்.கே. செல்வமணி, மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் அடங்குவார்கள். அதேபோல் தளபதி விஜயுடன் செந்தூரப்பாண்டி படத்தில் இணைந்து நடித்ததால், இந்த படத்தின் மூலம் விஜய்யின் நடிப்பும் கவனிக்கப்பட்டது. இப்படி ஆரம்ப காலத்தில், விஜய், சூர்யா, உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் குன்றி தொடர்ந்து ஓய்வில் இருந்தார்.
 

46

அடிக்கடி உடல்நிலை பாதிப்பட்டு... மருத்துவ சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் நேற்று காலை 6:10 மணி அளவில், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.  இவருடைய மறைவை தொடர்ந்து, அவருடைய உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மேலும்  இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக, சென்னை அண்ணா சாலையில் உள்ள தீவு திடலில் வைக்கப்படுகிறது. அதன் பின்னரே விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!
 

56

இந்நிலையில் நேற்று இரவு தளபதி விஜய், ஹைதராபாத்தில் நடைபெறும் தளபதி 68 படபிடிப்பை ரத்து செய்து விட்டு, சென்னைக்கு வந்து முதல் வேலையாக கேப்டன் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போது நடிகர் விஜய் கூட்டம் நெரிசலில் சிக்கிய நிலையில், அவர் மீது மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசி தாக்கிய சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

66

அதேபோல் விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது, ஒரு முறை கூட வந்து பார்க்காத நீ... இப்போ ஏன் வந்திருக்க வெளியே போ என சில கோஷமிட்டதாக கூறப்படுகிறது.  இது போன்ற செயலுக்கு பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் மீது செருப்பை தூக்கி வீசும் அளவுக்கு அப்படி என்ன வன்மம் என, தளபதி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vishal: மூஞ்சை மூடி கொண்டு ஓடியது யாருடன்.. காதலியா? வைரலாக வீடியோ பின்னணியை கூறிய நடிகர் விஷால்!

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved