திருவிழாவை பார்த்துவிட்டு அசதியில் தண்டவாளத்தில் உறங்கிய இளைஞர்கள்; ரயிலில் சிக்கி ஒருவர் பலி, இருவர் படுகாயம்
நாகையில் கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர்கள் மீது ரயில் ஏறி இறங்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
நாகை மாவட்டம். வேதாரண்யம் அடுத்த மணக்காட்டில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நேற்ற இரவு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் திருப்பூரில் பணி புரிந்து வந்த குமாரசாரதி (வயது 18), துளசி நாராயணன் (18), பிரபாகரன் (18) இளைஞர்கள் மூவர் அங்குள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.
இவர்கள் மூவரும் திருவிழாவை பார்த்துவிட்டு அருகில் இருந்த இரயில்வே தண்டவாலத்தில் தூங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தயன்பள்ளி நோக்கி சென்ற பயணிகள் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த மூவர் மீதும் ஏறியது.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிப்பு; போலீசார் விசாரணை
ரயிலில் சிக்கி படுகாயம் அடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த துளசி நாராயணன், பிரபாகரன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இரயில்வே போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட குமாரசாரதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.