சன் டிவி சூப்பர் ஹிட் தொடரில் இருந்து விலகும் ஹீரோயின்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் இருந்து, கதாநாயகி விலகி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சன் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் தனித்துவமான கதையம்சத்துடன்... இல்லத்தரசிகள் மனதை அதிகம் கவர்ந்து விடுகிறது. அந்த வகையில், திங்கள் முதல் சனி வரை மாலை 2 மணிக்கு ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான தொடர் இலக்கியா.2022-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியலை, சாய் மருது என்பவர் முதலில் இயக்கி வந்த நிலையில், அவர் விலகிய பின்னர் ஸ்டாலின் இனியன் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த சீரியலில் நடிகை ஹீமா பிந்து கதாநாயகியாக நடிக்க, சித்தி தொடரில் நடித்து பிரபலமான நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில், ரூபா ஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஸ் குமார், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
350 எபிசோடுகளை கடந்து, ரசிகர்களின் நல்ல வரவேற்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இருந்து, கதாநாயகியாக நடித்து வரும் ஹீமா பிந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீமா பிந்துவின் இந்த முடிவுக்கு காரணம், TRP ரேட்டிங் என கூறப்படுகிறது. பொதுவாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட, பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் (மாலை 6 மணி முதல் இரவு 10) மணிவரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அதிகம் பார்க்கப்படுவதால், TRP-யை வெகு சுலபமாக பெற்றுவிடுகின்றன.
இலக்கியா தொடர், மாலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட TRP பின்தங்கி உள்ளதை கருத்தில் கொண்டு இந்த சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அம்மணி பட வாய்ப்புகளும் வலை விரித்து வருகிறாராம். ஹீமா பிந்துவுக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.