Singer Velmurugan : சென்னையில் மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கிய வழக்கில் கைதான பிரபல பாடகர் வேல்முருகன் இப்பொழுது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிராமிய இசை கலைஞராக மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற பாடகர் தான் வேல்முருகன். கடந்த 2008 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் வந்த "மதுர குலுங்க குலுங்க" என்கின்ற பாடலை பாடி மிகப்பெரிய அளவில் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் தான் வேல்முருகன்.
இவர் குரலில் ஒலித்த பாடல்கள் பல மெகா ஹிட் பாடல்களாக மாறி உள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களோடு இணைந்து பயணித்து வரும் வேல்முருகன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று 28 வது நாளில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Dhanush: எது வேணுனாலும் தயங்காமல் கேளுங்கள்... ரூபாய் 1 கோடியை அள்ளிக்கொடுத்த நடிகர் தனுஷ்!
மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை, பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்ற்றுள்ளார். பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ள வேல்முருகன், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு மெட்ரோ அமைக்கும் பணிகள் நடப்பதால் சில தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.
அதை மீறி அவர் செல்ல முயன்ற போது அங்கே இருந்த வடிவேலு என்கின்ற மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் அவரை தடுத்து, நிலவரத்தை கூறியிருக்கிறார். அது ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாற, மெட்ரோ ஊழியர் வடிவேலுவை கடுமையாக பாடகர் வேல்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேலு அளித்த புகாரின் பேரில் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். மிகப்பெரிய பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜாமீனின் பேரில் வேல்முருகன் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே குடிபோதையில் சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
