மகள் கார்த்திகாவுக்கு கிலோ கணக்கில் நகைகளை போட்டு திருமணம் செய்த.. நடிகை ராதா Net Worth எவ்வளவு தெரியுமா
சமீபத்தில் நடிகை ராதாவின் மகள், கார்த்திகாவுக்கு திருமணம் நடந்தது. இதில் அவர் அணிந்திருந்த நகைகளை பார்த்து பலர் வியந்து போன நிலையில், ராதா நாயர் மற்றும் அவரின் கணவர் ராஜசேகரன் நாயர் ஆகியோரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
80-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதா. இவரின் சகோதரி அம்பிகாவை தொடர்ந்து இவரும், கடந்த 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
Karthika nair
முதல் படமே, இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை தேடி தந்த நிலையில், இதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சிவகுமார், மோகன், சத்யராஜ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான 'முதல் மரியாதை' படத்தில், இவர் நடித்த கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மனதில் மாஸ்டர் பீஸாக நிலைத்துள்ளது .
Karthika nair
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கிலும்.. ஷோபன் பாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். மலையாள திரையுலகிலும் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே... ராஜசேகர் என்கிற ஹோட்டல் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார்.
Karthika nair
இவருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளார். இவரின் மகள்களான கார்த்திகா மற்றும் துளசி இருவருமே திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு, பின்னர் ஒரேயடியாக சொந்த ஊருக்கே சென்று விட்டனர். இந்நிலையில், நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
Karthika nair
ரோஹித் மேனன் என்பவரை கார்த்திகா திருமணம் செய்து கொண்டார். இதற்கான விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில், தென்னிந்திய திரையுலகை சேர்ந்த 80-ஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திருமண புகைப்படத்தை கார்த்திகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
ஆடம்பரமாக கேரள முறைப்படி நடந்த இவர்கள் திருமணத்தில், கார்த்திகா... தங்க இழையால் நெய்யப்பட்ட பட்டு புடவையில் தகதகவென இறங்கி வர, கை, கழுத்து என பட அடுக்குகளுடன் கூடிய தங்க ஆபரணங்களை கிலோ கணக்கில் அணிந்திருந்தார். இது பார்பவர்களையே பிரமிக்க வைத்தது. அதே போல் தன்னுடைய திருமண சடங்குகளின் போதும்... விதவிதமான தங்க நகையில் ஜொலித்தார்.
Rachitha: ரக்ஷிதா மகாலட்சுமி இப்படி பட்ட பெண்ணா? தினேஷை பிரிய காரணம் இது தான்... கண்ணீர் விட்ட தாய்!
நடிகை ராதாவும், கிலோ கணக்கில் நகைகளை அணிந்திருந்தார். இப்படி பார்பவர்களையே சொர்ணத்தால் சொக்க வைத்த இவர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது. ராதா ஒரு பக்கம் சினிமாவில் பல கோடி சம்பாதித்திருந்தாலும், மகளுக்கு கிலோ கணக்கில் தங்கநகைகள், 5 ஸ்டார் ஹோட்டல் என, ஆஸ்தி அந்தஸ்துடன் இருப்பதற்கு முக்கிய கரணம் கார்த்திகாவின் தந்தையும் பாஜக தேசிய அவை உறுப்பினரும் தொழிலதிபருமான எஸ். ராஜசேகரன் நாயர் தான்.
ராஜசேகரன் 16 வயதில் வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறினார். தமிழகம் மற்றும் மும்பையில் காய்கறி கடைகள், ஓட்டல்களில் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதத்தால், மும்பை ஹோட்டல் துறையில் தனது சொந்த பட்டத்தை பெற்றது. 25 வருட அனுபவத்துடன் சொந்த ஊரான கேரளாவில் ஹோட்டல் தொழில் தொடங்கினார். பல தடைகளைத் தாண்டி பல கோடி வியாபாரியாக இன்று வளர்ந்து நிற்கிறார். இவரின் வெற்றிக்கு ஒரு மனைவியாக இருந்து ராதா எப்போதுமே சப்போர்ட் செய்துள்ளார். இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D