TOUR: ஊட்டி,கொடைக்கானல், குற்றாலத்திற்கு டூர் போறீங்களா.?அடுத்த 3 நாட்கள் ரிஸ்க்- சுற்றுலா பயணிகளுக்கு அலர்ட்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், குற்றாலத்திற்கு செல்ல தவிர்க்குமாறு மாநில பேரிடர் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோடை வெயிலில் இதமான வானிலை
தமிழகத்தில் பிப்ரவரி மாதமே வெயிலானது வாட்டி வதைக்க தொடங்கியது. அந்த வகையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. பல இடங்களில் வெப்ப அலையும் வீசியதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை நீடித்தது. இதன் காரணமாக குளுமையான இடங்களை தேடி குடும்பம் குடும்பமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல தொடங்கினர்.
kodaikanal ooty entry
வெப்பம் தனிந்தது
ஆனால் ஊட்டியிலும் எப்போதும் இல்லாத வகையில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.. 29 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமழிகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையானது பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.
மேலும் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கன மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் பழைய குற்றால அருவியில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் நடந்தது
ooty train service
ஊட்டியில் நிலச்சரிவு
இதே போல நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் கன மழை இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு 3 நாட்களுக்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டது.
Tamilnadu School ReOpen: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்..!
அருவிகளில் வெள்ளபெருக்கு
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் கொடைக்கானலில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழும் நிகழ்வும் தொடர்ந்து வருகிறது. மேலும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு கன மழை பெய்ய இருப்பதால் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ஒகேனக்கல் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மாநில பேரிடர் துறை எச்சரித்துள்ளது.