சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த 5 வகையான காலை உணவுகள் தான்..! லிஸ்ட் இதோ..!!.
இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் 5 வகையான காலை உணவுகள் குறித்து பார்க்கலாம். இந்த காலை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது இளம் வயதினரைக் கூட சர்க்கரை நோய் தாக்குகிறது. இந்த நோய் மரபணு ரீதியாக இருந்தாலும், மோசமான வாழ்க்கை முறையால் தான் அதிகமாக ஏற்படுகிறது. கணையத்தில் இன்சுலின் இயக்கம் குறையும் போது, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இந்த நோய் வருகிறது. மேலும், இந்த பிரச்சனையால், கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகள் பலவீனமடை தொடங்குகின்றன.
இந்த நோய் வந்த பிறகு, அதை அகற்ற முடியாது, ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவு மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம் தெரியுமா.. குறிப்பாக, இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு காலை உணவு மிகவும் முக்கியமானது. எனவே, இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் 5 வகையான காலை உணவுகள் குறித்து பார்க்கலாம். இந்த காலை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
கொண்டைக்கடலை சாலட்: சர்க்கரை நோயாளிகளுக்கு காலை உணவில் புரதங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. பயறு வகைகள், சுண்டல் வகைகளில் புரதங்கள் அதிகமாகவே உள்ளது. எனவே, ஒரு கப் வேகவைத்த கொண்டைக்கடலையில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிடலாம். இது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும்.
மசாலா ஓட்ஸ்: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நிறைய பேருக்கு ஓட்ஸ் தான் காலை உணவாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இதில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. ஆனால், நீங்கள் அதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகள் சேர்த்து மசாலா ஓட்ஸாக செய்து சாப்பிடுவது தான் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ராகி ஊத்தாப்பம்: சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி ஊத்தப்பம் சிறந்த தேர்வாகும். காரணம் இதில் அதிகளவு நார்ச்சத்துகள் உள்ளது. அது மட்டும் இன்றி இதில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்படி சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.
பச்சைப்பயறு தோசை: பச்சைப்பயறு தோசை சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமான காலை உணவில் இதுவும் ஒன்றாகும்.ப்இதில் புரோட்டீன்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இவை உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் நன்மையை வழங்குகிறது.
ஓட்ஸ் இட்லி: தற்போது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தான் இதை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இது சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. வெறும் ஓட்ஸ் மட்டுமல்லாமல், இதனுடன் சில காய்கறிகள் கொண்டு தயார் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.
முட்டை: சர்க்கரை நோயாளிகள் முட்டையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதை நீங்கள் வேக வைத்தோ அல்லது அதில் கொஞ்சம் நறுக்கிய வெங்காயம், பீன்ஸ் துருவிய கேரட் ஆகியவற்றை சேர்த்து ஆம்லெட்டாக செய்தும் சாப்பிட்டால் கூட நல்லதுதான்.