ஆளுங்கட்சி தான் இப்படி இருக்குதுன்னா! எதிர்க்கட்சி அதுக்கு மேல! அரசியல் செய்யத்தெரியாத இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!
நல்ல ஆட்சி மட்டும் அல்ல நல்ல எதிர்க்கட்சியும் ஜனநாயகத்திற்கு தேவை ஆனால் எதிர்கட்சி தலைவர் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே நேரம் போதவில்லை.
எதிர்க்கட்சி அரசியலை செய்யத்தெரியாத எடப்பாடி பழனிசாமி தலைமையும் தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு ஒரு முக்கிய காரணமாகவே உள்ளது என கே.சி.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தனது செல்போன் திருடப்பட்டது என்று வழக்கு தொடர்ந்த இளைஞர் தானே குற்றவாளியையும் பிடித்து கொடுத்து, ஆதாரத்தையும் கொடுத்த பிறகும், களவு பொருளை மீட்டு கொடுக்கவில்லை என்று செய்தியாளர்களை சந்தித்து கூறுகிறார்.
இதையும் படிங்க: இபிஎஸ் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டதும் மனசுல எம்ஜிஆர் நினைப்போ? எதுக்கு இந்த போலி வேடம்? கே.சி.பழனிசாமி!
* கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை தமிழகத்தில் 36,134 பதின்பருவ கர்ப்பங்கள் பதிவாகியிருப்பதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. இதில் சிறுமிகள் கடத்தல் வழக்கில் காவல்துறையின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் உள்ளது இன்றைய காவல்துறையின் செயல்பாடு.
* அதோடு தமிழகத்தில் புழங்கும் போதைப்பொருட்கள் அதனால் ஏற்படும் குற்றச்செயல்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நிலைமை உச்சம் பெற்ற பிறகு
முதல்வர் ஸ்டாலின் (மே 16,2024) அன்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
* ஆளும் கட்சிதான் இதுபோன்று மெத்தனமாக செயல்படுகிறது என்றால் எதிர்க்கட்சி தலைவரோ (மே 17,2024) அன்று தனது கண்டனத்தை தெரிவிக்கிறார். இன்னும் திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து வாய் கூட திறக்காமல் இருக்கிறார்.
* இதுபோன்று எதிர்க்கட்சி அரசியலை செய்யத்தெரியாத எடப்பாடி பழனிசாமி தலைமையும் தமிழகத்தின் இன்றைய அவலநிலைக்கு ஒரு முக்கிய காரணமாகவே உள்ளது.
* நல்ல ஆட்சி மட்டும் அல்ல நல்ல எதிர்க்கட்சியும் ஜனநாயகத்திற்கு தேவை ஆனால் எதிர்கட்சி தலைவர் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே நேரம் போதவில்லை. அழுத்தம் திருத்தமாக எதையும் சொல்வதில்லை கண்டனங்கள் இல்லை ஏதோ காலத்தை தள்ளி விட்டு செல்வது போலத்தான் உள்ளது என கே.சி.பழனிசாமி கே.சி.பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக 35 தொகுதிகளில் வெற்றி பெறும்! ஆனால்! EPS-க்கு ஜெயிக்கணும் எண்ணம் இல்லை! பாஜக நிலை என்ன? KC.பழனிசாமி!