MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!

Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!

Tamil Nadu Government: தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பின்னரே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 28 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மகளிர் உதவித்தொகை திட்டம்
Image Credit : our own

மகளிர் உதவித்தொகை திட்டம்

மகளிர் உதவித்தொகை திமுக ஆட்சியில் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வழங்கப்பட்டு வந்தது. முதலில் இந்த திட்டத்தில் இணைய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகையாக ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு போட்டியாக தவெக சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் ரூ.2500 வழங்கப்படும் என கூறப்பட்டது. 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தவெக தேர்தல் வாக்குறுதி
Image Credit : tndipr

தவெக தேர்தல் வாக்குறுதி

இந்நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில் மகளிர் உரிமை தொகை ரூ. 2500 எப்போது வழங்கப்படும் என எதிர்பார்ப்பில் தமிழக மகளிர்கள் காத்து கிடந்தனர். ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ரூ.1000 மட்டுமே வரவு வைக்கப்பட்டதால் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் எப்போது ரூ.2500 வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்து கிடந்தனர்.

Related Articles

Related image1
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!
Related image2
Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையாதா?
36
ரூ.2500 எப்போது வழங்கப்படும்?
Image Credit : Asianet News

ரூ.2500 எப்போது வழங்கப்படும்?

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட் இரண்டு வெளியாகியுள்ளது. உரிமைத்தொகை திட்டத்தில் இப்போது கொடுக்கப்படும் ரூ.1000யிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தி செயல்படுத்துவதற்கு முன்பு தமிழ்நாடு அரசு புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கலாமா? வேண்டாமா என தீவிரமாக பரிசீலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுத்தால் எத்தனை லட்சம் பேர் புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு அவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்களாக இருப்பார்கள் என அரசு கணக்கெடுக்க உள்ளது. அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மற்றும் இப்போது பயனாளிகளாக இருப்பவர்கள் என எல்லோருக்கும் மாதம் ரூ.2500 கொடுத்தால் மாதம் மற்றும் ஆண்டுக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் தமிழ்நாடு அரசு கணக்கீடு செய்ய உள்ளது.

46
முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றம்
Image Credit : Asianet News

முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றம்

தற்போது மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பயனாளிகளில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற பட்டியலும் ஆய்வு செய்யப்பட உள்ளது. அவர்களை இந்த திட்டத்தில் இருந்து நீக்கி, முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் மற்றும் நிதி மாற்றம் குறித்தும் கணக்கிடப்பட்டு வருகிறது.

56
பட்ஜெட்டுக்கு முன் முதல்வர் தீவிர ஆலோசனை
Image Credit : Asianet News

பட்ஜெட்டுக்கு முன் முதல்வர் தீவிர ஆலோசனை

இந்த கணக்கீடுகள் அனைத்தும் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்ட பிறகு, திட்டத்திற்கான கூடுதல் நிதிச் சுமையை அரசு எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் விஜய், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

66
இறுதி முடிவு எப்போது?
Image Credit : Asianet News

இறுதி முடிவு எப்போது?

இந்த ஆலோசனையின் போது தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பின்னரே, மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது முதல் வழங்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தற்போதைய நிலவரப்படி, மாதந்தோறும் ரூ.2500 வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகள் மற்றும் புதிய விண்ணப்பங்களுக்கான வாய்ப்புகள் குறித்தே அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!
Recommended image2
TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
Recommended image3
Bhagyaraj: திருமணமான 2 ஆண்டுகளில் உயிரிழந்த பாக்யராஜின் முதல் மனைவி யார்? பலரும் அறியாத சோக கதை!
Related Stories
Recommended image1
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!
Recommended image2
Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved