MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையதா?

Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையதா?

Magalir Urimai Thogai: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், மகளிர் உரிமை தொகை ரூ. 2500 எப்போது வழங்கப்படும் என எதிர்பார்ப்பில் தமிழக மகளிர்கள் காத்து கிடந்தனர். ஆனால் ரூ.1000 மட்டும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 16 2026, 11:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பெண்களுக்காக மகளிர் உதவித்தொகை திமுக ஆட்சியில் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் இணைய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகையாக ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு போட்டியாக தவெக சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் ரூ.2500 வழங்கப்படும் என கூறப்பட்டது. 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

Related Articles

Related image1
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Related image2
ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டீங்க.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த முன்னாள் நிதியமைச்சர்
35
Image Credit : Asianet News

இந்நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், மகளிர் உரிமை தொகை ரூ. 2500 எப்போது வழங்கப்படும் என எதிர்பார்ப்பில் தமிழக மகளிர்கள் காத்து கிடந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது ரூ.1000 மட்டும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஜூலை மாதத்திற்கான மகளிர் தொகை ரூ.1000 நேற்று வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் எப்போது ரூ.2500 கிடைக்கும் என எதிர்பார்த்து காத்து கிடந்தனர். வரும் ஜூன் 22ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

45
Image Credit : Asianet News

இந்நிலையில் தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது என தெரிவித்திருந்தார். கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தார்.

55
Image Credit : AI

இதனால் தவெக தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நிதி நிலையை காரணம் காட்டி தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
பெண்கள்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டீங்க.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த முன்னாள் நிதியமைச்சர்
Recommended image3
Now Playing
சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி
Related Stories
Recommended image1
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டீங்க.. தமிழக அரசின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த முன்னாள் நிதியமைச்சர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved