- Home
- Tamil Nadu News
- Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!
Power Shutdown: வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (29.06.2026) தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை
படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம், நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.
திண்டுக்கல்
வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டோபட்டி, செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி.
தேனி
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம், கம்பம், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன்கோவில், ஊத்துகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.
பெரம்பலூர்
புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

