- Home
- Tamil Nadu News
- TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
Jagathrakshakan Son: போதைப்பொருளை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான தவெக-வில், முக்கிய மதுபான ஆலை உரிமையாளரின் மகன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தே தீருவேன் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் பதவியேற்றதுமே பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் விற்பனையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இதற்காக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுத்துறை சார்ந்த விஷயங்களை மேம்படுத்த விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இருக்கின்ற சர்ச்சைகள் போதாது என மிகப்பெரிய மதுபான ஆலையான “அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட்” உரிமையாளரும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகனுமான ஜே. சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் எதிர்கட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் பல்வேறு தரப்பினரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக சந்தீப் ஆனந்த் தவெக தலைமையிடம் தனக்கு இளைஞர் அணி தலைவராக பதவி வேண்டும் என டீல் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “அரசியலில் அனுபவம் இல்லாமல் நேரடியாக உயர்ந்த பொறுப்பை கோருவது சரியா?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மற்றொருபுறம், தமிழ்நாட்டின் TASMAC அமைப்பிற்கு முக்கிய மதுபான விநியோகஸ்தராக இருப்பதாக கூறப்படுவது.
“மதுபான வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் இளைஞர் அணியை வழிநடத்துவது எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்?” என்ற சந்தேகங்களும் எழுந்திருந்தாலும், போதையை ஒழிக்கூடிய தூய சக்தியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட தவெக இதுபோன்ற நபர்களின் வருகையால் தீய சக்திகளின் கூடாரமாக மாறிவிடக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

