MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Crop Insurance: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த 26 வகையான பயிர்களுக்கு ஜூலை 31 வரை காப்பீடு செய்யலாம்!

Crop Insurance: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த 26 வகையான பயிர்களுக்கு ஜூலை 31 வரை காப்பீடு செய்யலாம்!

Farmers: எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய மகசூல் இழப்பைத் தவிர்க்க, ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதைப் பதிவு செய்யலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 26 2026, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விவசாயிகள் காப்பீடு
Image Credit : google

விவசாயிகள் காப்பீடு

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜுலை 31ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 2026-2027ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் குறுவை பருவத்தில் மாநிலத்தின் 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கார்/ குறுவை/ சொர்ணவாரி நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 9 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் அனைத்து குறுவை பருவ பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுமார் 6 இலட்சம் ஏக்கரில் குறுவை "நெற்பயிர்" பயிரிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எல் நினோ ஆபத்து
Image Credit : google

எல் நினோ ஆபத்து

தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
Tamilnadu Rain: ஒரு வாரத்திற்கு ஓயாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை..உங்கள் மாவட்டம் லிஸ்டில் உள்ளதா?
Related image2
Senthil Balaji: எதுக்கு இந்த பொழப்பு! இல்லைனா வழக்கு தான்! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜியின் தரமான பதிலடியும் எச்சரிக்கையும்!
35
அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு
Image Credit : Asianet News

அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு

அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நேற்று முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை நெற்பயிருக்கு ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 15 ஆகும். இதர அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் 2026 ஜூலை 31ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு மற்றும் நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு/ நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

45
இ-சேவை மையங்கள்
Image Credit : Asianet News

இ-சேவை மையங்கள்

எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள "விவசாயிகள் கார்னர்" வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி ஜூலை 31 எனவும் இக்காலக்கெடு எக்காரணத்திற்காகவும் நீட்டிக்க மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

55
பதிவு செய்ய என்னென்ன தேவை?
Image Credit : Asianet News

பதிவு செய்ய என்னென்ன தேவை?

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டு, அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் கிராமம்/ குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, வேளாண்மை அலுவலரையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் இப்பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து பயனடையுமாறு அமைச்சர் வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விவசாயக் கடன்
தமிழ்நாடு அரசு
காப்பீடு
பயிர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Video: பணத்தை பிரசாதமாக தரும் கருப்பசாமி! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோவிலா?
Recommended image2
Senthil Balaji: எதுக்கு இந்த பொழப்பு! இல்லைனா வழக்கு தான்! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜியின் தரமான பதிலடியும் எச்சரிக்கையும்!
Recommended image3
Now Playing
முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Related Stories
Recommended image1
Tamilnadu Rain: ஒரு வாரத்திற்கு ஓயாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை..உங்கள் மாவட்டம் லிஸ்டில் உள்ளதா?
Recommended image2
Senthil Balaji: எதுக்கு இந்த பொழப்பு! இல்லைனா வழக்கு தான்! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜியின் தரமான பதிலடியும் எச்சரிக்கையும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved