- Home
- Tamil Nadu News
- Senthil Balaji: எதுக்கு இந்த பொழப்பு! இல்லைனா வழக்கு தான்! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜியின் தரமான பதிலடியும் எச்சரிக்கையும்!
Senthil Balaji: எதுக்கு இந்த பொழப்பு! இல்லைனா வழக்கு தான்! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜியின் தரமான பதிலடியும் எச்சரிக்கையும்!
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய அரசு தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அதில், தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நலிவடைந்து கிடந்த மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் எங்களின் தலைவர் முதலமைச்சராக இருந்த போது மின்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்கி சீரான மின் விநியோகத்திற்கு வித்திட்டார். கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வந்துள்ளன. அப்படி மின் தேவை அதிகரித்த போதும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையானது 2011-16 இல் 56,361 கோடி , 2016-21 இல் 58,534 கோடி ரூபாய். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது. 37% , 3.5% , 16% என அந்த கட்டண உயர்வு இருந்தது. அப்படி மின் கட்டணம் ஏற்றப்பட்ட போது கூட வருவாய் பற்றாக்குறை என்பது ரூ. 56,000 கோடி. அதற்கடுத்து ரூ58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த எங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் வருவாயானது ரூ 1,48,77, 856 உயர்ந்து ரூ.4,97,996 ஆக இருந்தது. வருவாய் பற்றாக்குறை ரூ 34,447 கோடியாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 58,000 வருவாய் அதிகரித்த போது செலவும் அதிகரித்துள்ளது பற்றி கூறும் மின்சாரத்துறை அமைச்சர் அந்த செலவுகள் எதற்காக செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டார்.
அதையும் வெளிப்படையாக மக்கள் முன் கூறி இருக்க வேண்டும் ஆனால் அதை தவெக அரசு மறைத்துவிட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 13.5% வட்டி க்கு பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் சீர் படுத்தி 9.5% வட்டி என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1200-1500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. அதேபோல பிளை ஆஸ் (fly ash) விற்பனை ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் என்றிருந்ததை ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் உயர்த்தப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மின் தேவை என்பது 94,947 மில்லியன் யுனிட் அதுவே 2020-21 இல் 93,344 , 2021-22 இல் 98,674 மில்லியன் யுனிட், 2022-23 இல் 1,03,546 மில்லியன் யுனிட், 2023-24 இல் 1,11,504 மில்லியன் யுனிட், 2024-25 இல் 1,16,813 மில்லியன் யுனிட் ஆக 94,947 மில்லியன் யுனிட் லிருந்து 1,16,813 மில்லியன் யுனிட் ஆக மின் தேவை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 25,000 மில்லியன் யுனிட் அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கும் போது அதற்கான கொள்முதலை அதிகரிக்க வேண்டும் , உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான செலவினம் என்பதும் அதிகரித்துள்ளது இதனை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருக்க வேண்டும். அதேபோல இந்த வெள்ளை அறிக்கையில் திமுகவின் திட்டங்களையே பட்டியலிட்டுள்ளனர்.
2021 இல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் 1,59,731கோடி இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே 75,000 கோடி கட்டி உள்ளோம். இதை கூறாமல் மறைத்துள்ளனர். அதேபோல அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜஸ்தான் மின் மாற்றி கொள்முதலோடு தமிழ்நாட்டை ஒப்பிடுவதே தவறானது. நமது டெண்டர் முறை வேறு அவர்களுடையது வேறு. நாம் 25 ஆண்டுகள் நிலைத்திருக்க கூடிய தரமான மின் மாற்றிகளை வாங்குகிறோம். ஆனால் அவர்களுடைய மின்மாற்றி வாழ் நாள் 16 ஆண்டுகள் தான். அதே போல ஐந்தாண்டுகள் மெயிண்டனன்ஸ் அந்நிறுவனங்களின் பொறுப்பு அதற்காக நாம் 5% நிதியை பிடித்தம் செய்து வைத்துள்ளோம். ஆனால் ராஜஸ்தான் அரசு மூன்று வருடங்கள் மெயிண்டனன்ஸ், 0.5% நிதி மட்டுமே பிடித்தம் செய்கிறார்கள். தரமான பொருளுக்கும் டூப்ளிகேட் பொருளுக்குமான விலை வேறு வேறு ஆக தான் இருக்கும். நாம் தரமான மின் மாற்றியை வாங்குகி உள்ளோம். அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக நடந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள தர அளவுகளை குறைக்காமல் , நிபந்தனைகளை மாற்றாமல் புதிய அரசு எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.
அதேபோல கடந்த ஆட்சியில் எந்த கட்டமைப்பும் செய்யவில்லை என சொல்கிறார் அமைச்சர் ஆனால் அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையிலேயே எங்களது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு நடவடிக்கைகளும், புதிய மின் உற்பத்தி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. 99,573 மின்மாற்றிகள் புதியதாக நிறுவப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கையிலேயே கூறியுள்ளார்கள். 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இப்படி வெள்ளை அறிக்கையிலேயே நாங்கள் செய்த திட்டங்கள் இடம் பெற்றிருந்தும் அதை திரித்து அமைச்சர் பேசி உள்ளார். வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 3 , உடன் குடி மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் 75% நிறைவு பெற்றது.; குண்டாறு மின் திட்ட பணிகள் 85% முடிந்துவிட்டது; கொல்லிமலை மின் திட்டம் 90% முடிந்துவிட்டது.
சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் tnpsc தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படி திமுக அரசு செய்த செயல்களுக்கு தங்களின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகின்றனர். ஏன் இதனை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்கவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் மின்வாரியத்துறை தொடர்பாக எங்கள் தலைவரது குடும்பத்தையோ, எதிர்க்கட்சி தலைவர் அவர்களின நண்பர்களையோ இணைத்து அவதூறு பரப்பினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்.
இப்போது முதல்வரின் தனி செயலர் ஆக நியமிக்கப்பட்டுள்ள அவரது சினிமா proவான ஜெகதீஷ் தான் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் பார்க்கிறார் என சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறார்களா.? மின் வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதை தீர்க்க ஆய்வுக் கூட்டமே நடத்தவில்லை. அதை நான் எடுத்து சொல்லி கேள்வி கேட்டும் இன்று வரை பதில் இல்லை. தங்களின் நிர்வாகத் திறமை யின்மையை மூடி மறைக்க திமுக மீது ஆதாரமற்ற அவதூறுகளை கூறிக்கொண்டு இருக்காமல் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்த அரசு நவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

