MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Rain: ஒரு வாரத்திற்கு ஓயாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை..உங்கள் மாவட்டம் லிஸ்டில் உள்ளதா?

Tamilnadu Rain: ஒரு வாரத்திற்கு ஓயாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை..உங்கள் மாவட்டம் லிஸ்டில் உள்ளதா?

TN Weather Update: தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 25 2026, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
Image Credit : Google

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் இடி மின்னலுடன் கனமழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நாளை இடி மின்னல் கனமழை
Image Credit : Google

நாளை இடி மின்னல் கனமழை

அதேபோல் நாளை தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
Actor Santhini: 3 முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு.. நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்.. அதிமுக முன்னாள் அமைச்சரால் கதறும் நடிகை..
Related image2
VijayaBaskar Join TVK: இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்! தவெகவில் இணைய நாள் குறித்த விஜயபாஸ்கர்! முக்கிய பொறுப்பு ரெடி!
36
ஜூன் 27 எங்கெல்லாம் கனமழை
Image Credit : our own

ஜூன் 27 எங்கெல்லாம் கனமழை

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

46
ஜூன் 28 கனமழை எச்சரிக்கை
Image Credit : our own

ஜூன் 28 கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் , இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

56
காற்றுடன் கூடிய கனமழை
Image Credit : Google

காற்றுடன் கூடிய கனமழை

ஜூன் 29

தமிழகத்தில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 30

30-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜூலை 01

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

66
சென்னையில் இடி மின்னலுடன் கனமழை
Image Credit : our own

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!
Recommended image2
Now Playing
"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
Recommended image3
Now Playing
புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
Related Stories
Recommended image1
Actor Santhini: 3 முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு.. நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்.. அதிமுக முன்னாள் அமைச்சரால் கதறும் நடிகை..
Recommended image2
VijayaBaskar Join TVK: இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்! தவெகவில் இணைய நாள் குறித்த விஜயபாஸ்கர்! முக்கிய பொறுப்பு ரெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved