- Home
- Tamil Nadu News
- VijayaBaskar Join TVK: இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்! தவெகவில் இணைய நாள் குறித்த விஜயபாஸ்கர்! முக்கிய பொறுப்பு ரெடி!
VijayaBaskar Join TVK: இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்! தவெகவில் இணைய நாள் குறித்த விஜயபாஸ்கர்! முக்கிய பொறுப்பு ரெடி!
VijayBaskar Vs EPS: தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம். விஜயபாஸ்கர் 25 எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து இவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு.

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களில் அதிமுக தோல்வியை கண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. அதாவது எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம். சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடித் தூக்கினார்.
தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம். சி.விஜயபாஸ்கர் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து இவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 தங்களது பதவிகளை ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்தனர். அதன் பின்னர் பொதுச்செயலாளர் இபிஎஸ்யுடன் மீண்டும் சமரசம் உருவாகி அதிருப்தி அணியினர் மீண்டும் கட்சியில் ஐக்கியமாகினர்.
ஆனால் சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது மட்டுமல்லாமல் அவ்வப்போது அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை விஜயபாஸ்கர் கடந்த 16ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் இவர் திமுகவில் இணையப்போகிறாரா அல்லது ஆளுகட்சியான தவெகவில் இணையப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வைத்து அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை விஜயபாஸ்கர் சந்தித்துள்ளார். வரும் 29ம் தேதி காலை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயபாஸ்கருக்கு டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விராலிமலை தொகுதி இடைத்தேர்தலிலும் அவரே வேட்பாளராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

