- Home
- Tamil Nadu News
- Holiday: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு போறீங்களா? சூப்பர் அறிவிப்பு வெளியானது.!
Holiday: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு போறீங்களா? சூப்பர் அறிவிப்பு வெளியானது.!
Special Buses: மொஹரம் பண்டிகை மற்றும் வார விடுமுறையை என தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை
தமிழகத்தில் பவுர்ணமி, அமாவாசை, வார விடுமுறை, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி மொஹரம் பண்டிகை மற்றும் வார விடுமுறை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜூன் 25 (வியாழக்கிழமை) 26 (மொஹரம் பண்டிகை வெள்ளிகிழமை) 27 (சனிக்கிழமை) மற்றும் 28 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு 25, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம்
அந்த வகையில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 25 வியாழக்கிழமை அன்று 525 பேருந்துகளும், 26 வெள்ளிக்கிழமை, மற்றும் 27 சனிக்கிழமை 315 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 25 முதல் 27 வரை தலா 14 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்தும்
அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25 அன்று 85 பேருந்துகளும், 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் 75 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 12,445 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 5846 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3815 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 12,642 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு
இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 12,445 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 5846 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3815 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 12,642 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

