- Home
- Tamil Nadu News
- Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்!
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்!
Ration Card: இனி எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்றும் வேறு வேறு கடையில் ரேஷன் பொருளை பிரித்து வாங்கலாம் எனவும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில் மத்திய அரசு அப்டேட் கொடுத்துள்ளது.

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம்
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும் நமது தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் ரேஷன் விநியோக முறையை மத்திய அரசு தொடர்ந்து எளிமைப்படுத்தி வருகிறது. மக்களுக்கு எளிதாக ரேஷன் பொருட்கள் கிடைப்பதற்காக 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல்படுத்தப்பட்டது.
வெவ்வேறு கடைகளில் ரேஷன் பொருள் வாங்கலாம்
இந்தத் திட்டத்தின் கீழ், டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அந்த வகையில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது இனி நீங்கள் ரேஷன் பொருட்களை ஒரே கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆம், நீங்கள் உங்கள் ரேஷன் ஒதுக்கீட்டைப் பிரித்து வெவ்வேறு கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். உதாரணமாக, ஒரு கடையில் கோதுமையையும், மற்றொரு கடையில் அரிசியையும் வாங்க முடியும்.
ரேஷன் வாங்குவது இனி எளிது
இந்த புதிய மாற்றத்தால் பொதுமக்களின் அலைச்சல் குறையும். ஒரே கடையில் ரேஷன் வாங்குவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது. சில சமயங்களில் ஒரு கடையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது இருப்பு இல்லாதது போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஒரு கடையில் பொருள் இல்லை என்றால், மற்றொரு கடைக்குச் சென்று தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளலாம்.
மத்திய அரசு உறுதிப்படுத்தியது
ஒரு கடையில் கோதுமையை வாங்கிவிட்டு, மற்றொரு கடையில் அரிசியை வாங்கும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. இந்தத் தகவலை மத்திய இணை அமைச்சர் பி.எல். வர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பி.எல். வர்மா தனது பதிவில், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' (ONORC) திட்டத்தின் கீழ் ரேஷன் விநியோகத்தை எளிதாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப, நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் வெவ்வேறு இடங்களில் இருந்து தங்கள் ரேஷனைப் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.
நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் பொருட்கள்
இந்த வசதி ஒரு ஏடிஎம் போல செயல்படும். உங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம், குறிப்பாக இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவர்கள் ரேஷன் வாங்குவதற்காக தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மூலம் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

