Samantha: ஷாருக்கான் மிஸ் ஆன என்ன.. சல்மான்கானுடன் ஜோடி சேர போகும் சமந்தா? வேற லெவல் அப்டேட்!
நடிகை சமந்தா சல்மான்கானுக்கு ஜோடியாக தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
Samantha Ruth Prabhu Debut in Bollywood
நடிகை சமந்தா பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக, ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Samantha last release kushi
நடிகை சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த 'குஷி' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய சம்பளத்தில் இருந்து, ஒரு கோடியை கஷ்டப்படும் நூறு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்குவதாக அறிவித்தார். பின்னர் இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில் 100 குடும்பத்தினருக்கு பணமும் வழங்கப்பட்டது. விஜய் தேவரைகோண்டாவின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை குவித்தது.
Samantha Small Break in cinema
மேலும் 'குஷி' படத்தில் நடித்து முடித்த பின்னர், நடிகை சமந்தா 'சிட்டாடல்' வெப் தொடரில் நடித்தார். இதை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார். சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து இன்னும் முழுமையாக குணமாகாத நிலையில், சில நாட்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் முழு ஓய்வில் இருப்பதற்காகவும், மயோசிட்டிஸுக்கு சிகிச்சை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.
Samantha Vacation Photos
அதன்படி சமந்தா, தன்னுடைய தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்றது மட்டும் இன்றி, அங்கிருந்தபடி இவர் வெளியிட்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டது.
Samantha Divorce
இந்நிலையில் நடிகை சமந்தா பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 'ஜவான்' படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்த நிலையில், அப்போது சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருந்ததால் அந்த வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவை அட்லீ கமிட் செய்தார். மேலும் சமந்தாவும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்த பின்னர் ஒரேயடியாக நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று விளங்குவதாகவும் அறிவித்தார்.
Samantha Salmaan khan movie
இதைத்தொடர்ந்து மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். இடையில் மயோசிட்டிஸ் பிரச்னையாலும் அவதிப்பட்டார் சமந்தா என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலில், சமந்தா நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை பவன் கல்யாணை வைத்து 'பஞ்சா' படத்தை இயக்கிய, விஷ்ணுவர்தன் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Samantha Bollywood Movie
ஷாருக்கானுக்கு ஜோடியாக தென்னிந்திய நடிகை ஒருவர் நடித்து அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால், சல்மான் கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, சமந்தா, போன்ற மூவரில் யாரேனும் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இவர்களில் கிட்டத்தட்ட சமந்தாவை நடிக்க வைப்பது உறுதி ஆகிய உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.