அப்பாடா... ஒருவழியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது.. தமிழ்நாட்டின் நிலை என்ன?
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Coronavirus
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் திடீரென JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பரவல் கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதை அடுத்து வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
coronavirus JN1 sub-variant
இந்தியாவில் நேற்று முன்தினம் 841ஆக குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 636 ஆக குறைந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Covid subvariant JN 1
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 309-ல் இருந்து 4 ஆயிரத்து 394 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.
Tamilnadu Corona
இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 15 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேருக்கும், கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.