சோப்பு சுத்தம் தரும்.. ஆனா இந்த '6' பொருள்களை சோப்பு போட்டு கழுவினால் பாதிப்பு வரும்!!
Cleaning Tips : பாத்திரம், துணிகளுக்கு சோப்பு பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சில பொருட்களுக்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது. அது என்ன மாதிரியான பொருட்கள் என்று இங்கு பார்க்கலாம்.
Things Never To Clean With Soap In Tamil
பாத்திரம் கழுவுவதற்கு, துணி துவைப்பதற்கு, குளிப்பதற்கு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சோப்புகள் உள்ளன. அவை அனைத்திலும் பல வகைகள் உள்ளன. இவை தவிர வீட்டில் உள்ள சில பொருட்களையும் சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
ஆனால், சில பொருட்களை சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் அது சேதமடைந்துவிடும். அப்படி எந்த மாதிரியான பொருட்களை சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Things Never To Clean With Soap In Tamil
சோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்ய கூடாத 6 பொருட்கள்:
இரும்பு பாத்திரங்கள்:
இரும்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இரும்பு பாத்திரத்தில் சோப்பு பயன்படுத்தும் போது அது எளிதில் துருப்பிடித்து விடும். இதுதவிர, அதில் சமைக்கும் உணவின் சுவையையும் மாற்றிவிடும். இதற்கு பதிலாக வெந்நீர் மற்றும் உப்பை பயன்படுத்தி கழுவுங்கள்.
Things Never To Clean With Soap In Tamil
கம்பளி போர்வைகள்:
கம்பளி போர்வையை துவைக்கும் போது சோப்பு போட்டு துவைக்க வேண்டாம். ஏனெனில் அவற்றை சோப்பு போட்டு துவைக்கும் போது கம்பளி போர்வை சீக்கிரமாகவே சுருங்கிவிடும்.
இதையும் படிங்க: சிங்க் அடிக்கடி கழுவ கஷ்டமா இருக்கா? இப்படி பண்ணா ரொம்ப ஈஸியா கிளீன் பண்ணிடலாம்!!
Things Never To Clean With Soap In Tamil
பட்டுப் புடவைகள்:
பட்டு புடவைகளை சோப்பு போட்டு துவைத்தால் அவற்றின் நிறம் மங்கி விடும் மற்றும் பட்டு நூலில் சேதம் ஏற்படும். எனவே பட்டுப் புடவையை சோப்பு போட்டு துவைப்பதற்கு பதிலாக ட்ரை வாஷ் செய்வது தான் ரொம்பவே நல்லது..
இதையும் படிங்க: வெறும் '10' நிமிடத்தில் பிரிட்ஜ் க்ளீன் ஆகும்!! பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ்
Things Never To Clean With Soap In Tamil
ஃபர் ஆடைகள்:
ஃபர் ஆடைகளை துவைக்கும் போது சோப்பு பயன்படுத்த வேண்டாம். ஃபர் ஆடைகளில் சோப்பு பயன்படுத்தும் போது அவை சேதமடைந்துவிடும்.
Things Never To Clean With Soap In Tamil
லெதர் பொருட்கள்:
உங்கள் வீட்டில் இருக்கும் சோபா, ஹேண்ட் பேக் போன்ற லெதர் பொருட்களை சுத்தம் செய்வதற்கு ஒருபோதும் சோப்பு போட வேண்டாம். லெதர் பொருட்களின் மீது சோப்பை பயன்படுத்தும் போது அவை சேதமடைந்து விடும். அதற்கு மாறாக நீங்கள் ஒரு துணியை தண்ணீரில் நினைத்து அதை வைத்து துடைக்கலாம்.
Things Never To Clean With Soap In Tamil
கத்திகள்
கத்திகளை சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சோப்பு மற்றும் தண்ணீரால் கத்தியில் துருப்பிடித்து விடும். மேலும் சீக்கிரமாகவே கத்தி மந்தமாகிவிடும் எனவே கத்தியை ஈரமான துணியை வைத்து துடைக்க வேண்டும்