இந்த காய்கறிகளின் தோலை இனிமே உரிக்காதீங்க... இல்லனா இழப்பு உங்களுக்கு தான்!
காய்கறிகளை சமைப்பதற்கு முன் அவற்றின் தோலை உரிப்பது நல்லது. ஆனால், எல்லா காய்கறிகளிலும் இப்படி செய்ய கூடாது.
நம்முடைய ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. காரணம் அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காய்கறிகள் உடலை வலுவாக்குவது மட்டுமின்றி, தசைகளை வலிமையாக்குகிறது.
பொதுவாகவே, நாம் காய்கறிகளை சமைப்பதற்கும் முன் அவற்றை தண்ணீரின் நன்கு கழுவி, தோலை உரிப்பது வழக்கம். ஆனால், எல்லா காய்கறிகளிலும் இதை செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஏனெனில், சில காய்கறிகளின் தோல்கள் மிகவும் சத்தானவை. எனவே, அவற்றை தோலுரிக்காமல் அப்படியே சமைக்கலாம். அந்த காய்கறிகள் எவையெல்லாம் என்று இங்கு பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு: பெரும்பாலானோர், உருளைக்கிழங்கின் தோலை உரித்த பிறகு தான் அதை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் உருளைக்கிழங்கின் தோலை நீக்கினால் அதில் இருக்கும் சத்துக்கள் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இதில் பொட்டாசியம், வைட்டமின் சி, ஏ என பல சத்துக்கள் உள்ளது. எனவே, அவற்றை தோல் உரிக்காமல் அப்படியே பயன்படுத்துவது நல்லது.
வெள்ளரிக்காய்: நம்மில் பலர் வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கு முன் அவற்றின் தோல்கள் நீக்குவது வழக்கம். ஆனால், வெள்ளரிக்காய் போலவே அவற்றின் தோல்களிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, இவற்றின் நன்மையை முழுமையாகப் பெற வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: தினமும் இந்த 7 காய்கறிகளை சாப்பிட்டால், உடலில் சீராகும் நோய்கள்... ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கேரண்டி..!
இனிப்பு உருளைக்கிழங்கு: வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி தவிர, இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் இனிப்பு உருளைக்கிழங்கின் தோள்களிலும் உள்ளன. எனவே, இனிப்பு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் கண் பார்வை மேம்படும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் வலிமையும் அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!
முள்ளங்கி: பலர் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு தான் சமைக்க விரும்புகிறார்கள் ஆனால் உடலுக்கு பலன் தரும் முள்ளங்கி தோளில் பல வகையான சத்துக்கள் உள்ளன. முக்கியமாக, நீங்கள் முள்ளங்கியை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் வைட்டமின் சி மற்றும் கால்சியம் ஆகியவை உங்களுக்கு கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D