தினமும் இந்த 7 காய்கறிகளை சாப்பிட்டால், உடலில் சீராகும் நோய்கள்... ஆரோக்கியமான நீண்ட ஆயுள் கேரண்டி..!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாள்தோறும் சாப்பிட வேண்டிய 7 காய்கறிகளைத் தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
கீரை ஊட்டம் - உடல் வலு
கீரைகளில் அவ்வளவு சத்துக்கள் காணப்படுகின்றன. தினமும் ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைக்கும். கண் பார்வை முதல் வயிற்று பிரச்சனைகள் வரை எல்லாம் சரியாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
ப்ரோக்கோலி - புற்று செல்கள் எதிர்ப்பு
ப்ரோக்கோலியில் இருக்கும் குளுக்கோசினோலேட்டின் துணைப் பொருளான சல்போராபேன், புற்றுநோயிலிருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கும் என சொல்லப்படுகிறது. இதனை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
பச்சை பட்டாணி - வைட்டமின்களின் புதையல்
காண்பதற்கு தான் இவை சிறிய விதைகள் போல இருக்கும். ஆனால் இதில் புரதங்கள், வைட்டமின்கள் ஏ, சி, கே, ரிபோஃப்ளேவின், தியாமின், நியாசின், ஃபோலேட் ஆகியவை பட்டாணியில் நிறைய உள்ளன. தினமும் இதை சாப்பிட வேண்டும்.
பூண்டு - இதய ஆரோக்கியம்
பூண்டின் வாசனை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் புறக்கணிக்க முடியாது. பூண்டில் உள்ள அல்லிசின் இரத்த சர்க்கரை, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது குறைக்கிறது.
Image: Getty Images
கேரட் - கண்களுக்கு நல்லது
தினமும் கேரட் சாப்பிட வேண்டும். இதனால் வைட்டமின் ஏ அதிகம் கிடைக்கும். புற்றுநோயை எதிர்த்து போராடும் குணம் இதில் உள்ளது.
பீட்ரூட் - இரத்த அழுத்தம் குறையும்
பீட்ரூட் உங்களுடைய இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இரத்த அழுத்த பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது ஆசீர்வாதம். இரத்தம் பெருகவும், சருமம் பொலிவுறவும் பீட்ரூட் உதவும்.
இதையும் படிங்க: காலையில் சுக்கு மல்லி கஷாயம்... எவ்வளவு சளி இருந்தாலும் முறிக்கும்.. 1 டம்ளர் குடித்தால் போதும்..!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கை எல்லோருக்கும் பிடிக்கும். இதில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளது.
இந்த 7 காய்கறிகளை உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். காய்கறிகளை சமைக்கும் முன்பு நன்கு கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: கொத்தமல்லி தழை சீக்கிரம் அழுகாமல் இருக்கணுமா? நீண்ட நாட்கள் சேமித்து வைக்க இதை செய்யுங்கள்!