MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வாய் கிழிய பேசுவோம் ஆனா.. 'இந்தியன் 2' ட்ரைலரில் தலைவர் தாக்கப்பட்டார்! நோட் பண்ணி போட்டு தாக்கிய ப்ளூ சட்டை!

வாய் கிழிய பேசுவோம் ஆனா.. 'இந்தியன் 2' ட்ரைலரில் தலைவர் தாக்கப்பட்டார்! நோட் பண்ணி போட்டு தாக்கிய ப்ளூ சட்டை!

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. ட்ரைலர் குறித்து ப்ளூ சட்டை மாறன் தலைவர் தாக்கப்பட்டார் என 'அந்த டயலாக்கை நோட் பண்ணி கூறியுள்ளார்'. இதன் பின்னணி குறித்து பார்க்கலாம் வாங்க. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 25 2024, 10:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உலக நாயகன் கமல்ஹாசன், 'விக்ரம்' பட வெற்றிக்கு பின்னர்... தேர்வு செய்து நடிக்கும் படங்களின் கதையிலும், கதாபாத்திரத்திலும், கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம், 'இந்தியன் 2'. கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி இமாலய வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தை மீண்டும் தூசு தட்டி இயக்குனர் ஷங்கர்... சுமார் 29 வருடங்களுக்கு பின்னர் நாட்டின் நிலவரத்தை மக்களுக்கு எடுத்து கூறும் விதமாகவே இந்தியன் தாத்தாவை களமிறக்கி 'இந்தியன் 2' பாகத்தை இயக்கியுள்ளார்.
 

26

'இந்தியன் 2' படத்தின் அறிவிப்பு 2017-ஆம் ஆண்டு வெளியானாலும் கூட, இப்படத்தின் படப்பிடிப்பு 2019-ல் தான் துவங்கியது. இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகளில் இந்தியன் தாத்தா சிக்கிய நிலையில், ஒருவழியாக அனைத்தையும் கடந்து ரிலீசுக்கு இப்போது தான் தயாராகி உள்ளார்.

மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடித்துள்ள 'நேசிப்பாயா - லவ் மீ, லவ் மீ நாட்' ரிலீஸ் அப்டேட்!
 

36

முதல் பாகத்தில் அப்பா சேனாதிபதி கதாபாத்திரத்திலும், மகன் சந்துரு வேடத்தையும் ஏற்று நடித்த கமல், இரண்டாம் பாகத்தில் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது போல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியை பின்பற்றும் வெறித்தனமான மக்கள் காப்பாளராக களமிறங்கி உள்ளார்.
 

46

மேலும் இந்த படத்தில் மக்கள் உரிமைக்காகவும், அநீதிக்காகவும் போராடும் ரோலில் சித்தார்த், ப்ரியா பவானி நடிக்க, பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நெடுமுடி வேணு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வர, விவேக் வழக்கம் போல் காமெடியை அள்ளி தெறிக்கும் காவலாளராக நடித்துள்ளார். அதே போல் இப்படத்தில் மனோபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காந்தி வழில நீங்க.. நேதாஜி வழியில நான்.. ஷங்கரின் இந்தியன் 2 பட டிரெய்லர் வெளியானது.!!
 

56

படத்தின் மொத்த பணிகளையும் முடிந்து 'இந்தியன் 2' ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்... ஒரு மணிநேரம் தாமதமாக அதாவது சரியாக 7 மணிக்கு தான் 'இந்தியன் 2' ட்ரைலர் வெளியானது. ட்ரைலரிலேயே தன்னுடைய மாஸை கமல்ஹாசன் வெளிப்படுத்தியதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
 

66

இந்த ட்ரைலரில் நடிகர் சித்தார்த் ஒரு காட்சியில் பேசும் போது...  'சிஸ்டம் சரியில்லைனு வாய் கிழிய பேசுவோம். ஆனா அதை தடுக்க ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடுறது இல்ல' என கூறியதை சுட்டி காட்டி, சிஸ்டம் சரி இல்லை என பேசி... அரசியலுக்கு வருவதாக அறிவித்து கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய ரஜினியை தான் குறி வைத்து பேசியுள்ளார் என்பதை தெரிவிக்கும் விதத்தில், அந்த வசனத்தை பதிவிட்டு தலைவர் தாக்கப்பட்டார் என எக்ஸ் தலைப்பதில் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

Siragadikka Aasai: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு கிடைத்த ஸ்வீட் நியூஸ்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
இயக்குநர் ஷங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved