- Home
- Gallery
- Siragadikka Aasai: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு கிடைத்த ஸ்வீட் நியூஸ்!
Siragadikka Aasai: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு கிடைத்த ஸ்வீட் நியூஸ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல், இந்த வாரம் வீக் எண்டில் ஸ்பெஷல் எபிசோடாக 2 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'சிறகடிக்க ஆசை'. விறுவிறுப்பான குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஆல்வின் பிரசாத் ராஜ் என்பவர் திரைக்கதை எழுத, குரு சம்பத்குமார் நந்தன் என்பவர் வசனம் எழுதி வருகிறார். இந்த சீரியலை எஸ்.குமரன் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்த தொடரில் ஹீரோவாக வெற்றி வசந்த் நடிக்க, ஹீரோயினாக கோமதி பிரியா நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், பாக்கியலட்சுமி, சல்மா அருண், ஸ்ரீதேவா, ப்ரீத்தா ரெட்டி, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஹீரோவின் அப்பாவாக அண்ணாமலை எனும் கதாபாத்திரத்தில் ஆர்.சுந்தர்ராஜன் நடித்து வரும் நிலையில்... இவர் ரயில்வே வேலையில் இருந்து ரிட்டயர் ஆகும் சமயத்தில் இவருடைய ரயிலில் அடிபட்டு மீனாவின் தந்தை உயிரிழக்க, அந்த குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல செல்லும் அண்ணாமலை, தன்னுடைய மூத்த மகனுக்கு மீனாவை திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
ஆனால் மனோஜ் அதிகம் படித்தவர். அதிகம் படிக்காத ஒரு பூ கட்டும் பெண்ணை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறுகிறார். எனவே தன்னுடைய ரிட்டயர்மென்ட் பணமான 27 லட்சத்தையும் அவரிடம் கொடுத்து, மீனாவை திருமணம் செய்து கொள்ள கூறுகிறார். ஆரம்பத்தில் மீனாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கும் மனோஜ், பின்னர் 27 லட்சத்தையும் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறி ஜீவா என்பவரிடம் கொடுத்து ஏமார்ந்து விட்டு திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கிறார்.
விவாகரத்துக்கு பின் கிடைத்த சுதந்திரம்! நீண்ட இடைவெளிக்கு பின்னர் இமானுடன் கூட்டணி வைத்த சைந்தவி!
வேறு வழி இல்லாமல் அண்ணாமலையின் இரண்டாவது மகனான முத்துவுக்கும், மீனாவுக்கும் திருமணம் நடக்கிறது. முத்து எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் குடிகாரனாக இருக்கும் ஒரு டாக்ஸி டிரைவர். அவருடன் எப்படி வாழ்க்கையை தொடங்குவது என மீனாவின் மனதில் பல்வேறு தடுமாற்றங்கள் இருந்தாலும், மெல்ல மெல்ல அவரை மாற்றி கடைக்கு கொண்டு வந்து அன்பான கணவனாக மாற்றுகிறார்.
தற்போது இந்த சீரியலின் கதைப்படி அண்ணாமலையின் மூன்று மகன்களான மனோஜ், முத்து, ரவி, ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்டது. மூவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் இருக்கும் நிலையில், மாமியார் விஜயா ஏழை வீட்டு பெண்ணான மீனாவை மட்டுமே டார்கெட் செய்து பல கொடுமை செய்கிறார். மேலும் அண்ணாமலை வாழ்ந்து வரும் வீட்டில் மூன்று ரூம்கள் மட்டுமே இருப்பதால், எப்படியும் மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறார். ஆனால் இதற்கு தீர்வு கொண்டு வரும் விதமாக அண்ணாமலை மொட்டை மாடியில் ரூம் ஒன்றை கட்ட முடிவு செய்கிறார். இந்த பிரச்சனை தான் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இளையராஜா ஆசை நிறைவேறல! நானும் லிவிங்ஸ்டனும் பிரிய காரணம் 2 பெண்கள் தான்! ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!
இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு ஸ்வீட் தகவல் ஒன்றை சீரியல் குழு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த சீரியல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாது ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிறகடிக்க ஆசை சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரை மணி நேரம் போட்டாலே சேனலை மாற்றாமல் பார்க்கும் ரசிகர்கள், இரண்டு மணி நேரம் என்றால் 2 லட்டு தின்னுவது போல்... பார்க்காமல் விட்டு விடுவாங்களா என்ன?