முத்திரைகுத்திட்டாங்க.. கல்யாணம் கூட பண்ண முடியல.. வருந்தும் நடிகை சோனா - அவங்க அடுத்த ஸ்டெப் என்ன தெரியுமா?
தல அஜித் அவர்களின் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி நாயகியாக நடித்து வந்த நடிகை தான் சோனா ஹெய்டன்.
Tamil Actress Sona
அஜித் அவர்களின் "பூவெல்லாம் உன் வாசம்" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நேற்று நடித்த நிலையில், அதே ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "ஷாஜகான்" படத்திலும் அப்பட நாயகியின் தோழியாக நடித்திருப்பார் நடிகை சோனா. அதன் பிறகு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் கவர்ச்சி நடிகையாக அவர் களமிறங்கியது அனைவரும் அறிந்ததே.
வடிவேலு உட்பட பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். கடந்த 22 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், கவர்ச்சி நடிகையாகவும், குத்து பாட்டிற்கு நடனமாடும் நடிகையாகவும் விளங்கிவரும் சோனா தனது வாழ்க்கை முற்றிலுமாக மாறியது குறித்து தற்பொழுது பேசியுள்ளார்.
Actress Sona Haiden
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை சோனா, நான் கவர்ச்சியாக நடிப்பது திரைப்படங்களுக்காக மட்டுமே தான், ஆனால் என் நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படிதான் என்று பலரும் நினைக்கின்றனர். இதனாலேயே நான் திருமணம் செய்து கொள்ளவே முடியாமல் போனது, செய்து கொள்ள விருப்பமும் எனக்கு ஏற்படவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Kollywood Actress Sona
தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்ததால் நான் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்தப்பட்டேன், ஆனால் நானும் பிற பெண்களைப் போல குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தான் ஆசைப்படுகிறேன். என் வீட்டு வேலைகளை நானே தான் செய்கிறேன், தினமும் சமையல் கூட நானே தான் செய்கின்றேன்.
ஆனால் வெளியில் இருந்து என்னை பார்ப்பவர்கள் என்னை ஒரு கவர்ச்சி நாயகியாக மட்டுமே பார்க்கிறார். இந்நிலையில் என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்த பல விஷயங்களை ஒளிவு மறைவின்றி எனது பயோபிக் மூலம் சொல்ல உள்ளேன். "ஸ்மோக்" என்கின்ற தலைப்பில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வெப் சீரியஸ் ஆக எடுக்க உள்ளேன் என்று கூறியுள்ளார் சோனா. ஒரு தனியார் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ்க்கு இயக்குனராக சோனா அவர்களே செயல்படவுள்ளார்.