MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் செல்லும் அரண்மனை 4... கோடி கோடியாய் குவியும் வசூல்; 3 நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் செல்லும் அரண்மனை 4... கோடி கோடியாய் குவியும் வசூல்; 3 நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 06 2024, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sundar C, Tamannaah

Sundar C, Tamannaah

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் அரண்மனை 4. இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் சுந்தர் சி. முதலில் இப்படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அவருக்கு பதில் சுந்தர் சி-யே ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

24
Aranmanai 4

Aranmanai 4

அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரியளவில் ஹிட் ஆனாலும் கடைசியாக வெளிவந்த அதன் மூன்றாம் பாகம் பெரியளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் பேமிலி ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பால் அப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. அரண்மனை 3 படம் சொதப்பியதால் அதில் இருந்து கம்பேக் கொடுக்க முடிவெடுத்த சுந்தர் சி, அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை செம்ம மாஸாக இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Ajith : "சர்ஜரிக்கு பின் எனக்கு என்ன ஆகும்னு தெரியல.. சோ.." அஜித் அனுபவித்த வேதனை - மனம் திறந்த சுந்தர் சி!

34
Aranmanai 4 Box Office

Aranmanai 4 Box Office

குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் பாக் கான்செப்ட் ரசிகர்களை பெரியளவில் ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை, தமன்னாவின் நடிப்பு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்துள்ளதால், அரண்மனை 4 திரைப்படத்திற்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி, வசூலிலும் டாப் டக்கர் சாதனை படைத்து வருகிறது.

44
Aranmanai 4 Day 3 Box Office Collection

Aranmanai 4 Day 3 Box Office Collection

அந்த வகையில் முதல் நாளில் ரூ.4.5 கோடி வசூலை வாரிக்குவித்த அரண்மனை 4 திரைப்படம், இரண்டாம் நாளில் ரூ.6 கோடி வசூலித்து இருந்தது. இந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று இப்படம் ரூ.7.5 கோடி வசூலித்து உள்ளது. இதன்மூலம் மூன்று நாட்கள் முடிவில் அரண்மனை 4 திரைப்படம் ரூ.18 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் இப்படம் விரைவில் ரூ.50 கோடி வசூலை அசால்டாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... "கோர்ட்டில் அமிதாப் & சூப்பர் ஸ்டார்".. ஜோராக நடக்கும் வேட்டையன் ஷூட்டுங் - என்ன கதை? போட்டு உடைத்த பிரபலம்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved