- Home
- Gallery
- Anna serial : ஷண்முகத்தை கொல்ல நடக்கும் சதி... பரணி கண்ட கனவு பலிக்குமா? - அண்ணா சீரியல் அப்டேட்
Anna serial : ஷண்முகத்தை கொல்ல நடக்கும் சதி... பரணி கண்ட கனவு பலிக்குமா? - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்தை நான்கு ரவுடிகள் குத்தி கொல்வது போல் கனவு கண்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்தை நான்கு ரவுடிகள் குத்தி கொல்வது போல் கனவு கண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பரணி தூக்கத்தில் இருந்து அலறி எழுந்து கொள்ள ஷண்முகம் என்னாச்சு என்று கேட்க பரணி உனக்கு ஒன்னும் இல்லையே என்று பதறுகிறாள், கொஞ்ச நேரத்தில் எல்லாரும் அங்கு வந்து விட பரணி சண்முகத்தை கொல்வது போல் கனவு கண்டதாக சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஷண்முகம் கனவு தானே நிஜம் இல்லையே என்று ஆறுதல் சொல்கிறான்.
Zee Tamil Anna Serial
வைகுண்டம் இந்த மாதிரி யாராவது இறந்துட்ட மாதிரி கனவு கண்டா அவங்களுக்கு பெருசா ஏதோ நல்லது நடக்கும்னு சூடாமணி சொல்லுவா என்று சொல்லி சமாதானம் செய்து பரணியை தூங்க வைக்கிறார். அடுத்து சண்முகத்தை தனியாக அழைத்து சென்று பரணியை ஆறுதல் படுத்த தான் அப்படி சொன்னேன், எனக்கே பயமா இருக்கு என்று பதற ஷண்முகம் அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது என்று அப்பாவுக்கு ஆறுதல் சொல்கின்றான்.
அடுத்து ஷண்முகம் உடன்குடியுடன் செட்டு ரூமுக்கு வர இங்கு முத்துப்பாண்டி நான்கு ரவுடிகளை கூப்பிட்டு சண்முகத்தை கொல்ல சொல்லி பேசி கொண்டிருக்க முத்துப்பாண்டி பேசுவதை பார்த்து கிட்ட வர ஷண்முகத்திற்கு போன் வர ரிங் சத்தம் கேட்டதும் முத்துப்பாண்டி யாரோ இருக்காங்க என்று பேச்சை நிறுத்தி விடுகிறான்.
இதையும் படியுங்கள்... Nayanthara: சேட்டைக்கார மகன்களை பாசத்தால் கட்டிப்போடும் நயன்தாரா- விக்கி வெளியிட்ட அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோ
Anna Serial Update
மறுபக்கம் பரணி கோவிலில் ஷண்முகம் பெயரில் அர்ச்சனை செய்ய காத்திருக்க சௌந்தரபாண்டி நான்கு புது அய்யர்களை வரவைத்து சண்முகத்தை அழிக்க சத்ரு சம்ஹார யாகம் நடத்த வேண்டும் என்று பேசி கொண்டிருக்க பரணி இவர்கள் பேசுவதை பார்த்து நெருங்கி வர சௌந்தரபாண்டி பேச்சை நிறுத்தி விடுகிறார்.
அடுத்து ஷண்முகம் கோவிலுக்கு வர அய்யர் மீது மோத விடுகிறான், புதியதாக இருப்பதால் யார் என்ன என்று விசாரிக்க வெளியூர் அய்யர் எனவும் சத்ரு சம்ஹார யாகம் நடத்த வந்திருப்பதாகவும் சொல்ல அப்படினா என்ன என்று கேட்க ஒருத்தரை அழிப்பதற்காக செய்யும் யாகம் என்று விளக்கம் கொடுக்க சௌந்தரபாண்டி தூரத்தில் இருந்து இதை எல்லாம் பார்த்து விடுகிறார்.
anna serial Today Episode
அடுத்து வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி ஷண்முகத்திற்கு எதிராக யாகம் நடத்த போவதை சொல்ல முத்துப்பாண்டி சண்முகத்தை கொல்ல ஏற்பாடு பணியாச்சு என்று சொல்கிறான், சண்முகத்தை ஊருக்கு ஒதுக்கு புறமா கூட்டி வரணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதுக்கு ஒரு ஐடியா சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. கார்த்திக் மீது காதலில் விழுந்த ரம்யா- கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்