MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Gallery
  • சேப்பாக்கில் கடைசி ஐபிஎல் லீக் போட்டி... ஓய்வு பெறுகிறாரா தோனி? சிஎஸ்கே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சேப்பாக்கில் கடைசி ஐபிஎல் லீக் போட்டி... ஓய்வு பெறுகிறாரா தோனி? சிஎஸ்கே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 61ஆவது லீக் போட்டியுடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 12 2024, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான கடைசி லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக இந்த போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அனைவரும் மைதானத்திலேயே தங்கியிருக்கும்படி சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

இது தோனிக்கான ஃபேர்வெல் டேயாக கூட இருக்கலாம். அதற்காகத்தான் சிஎஸ்கே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தோனியின் உடல்நிலை குறித்து இப்படியொரு முடிவை அறிவிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும், எக்ஸ் பக்கங்களில் தோனியின் ஓய்வு குறித்து வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் வைரலாகி வருகிறது.

310
IPL 2024

IPL 2024

இவ்வளவு ஏன், தோனியின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர்கள் போட்டியில் பேசி வருகின்றனர். சிஎஸ்கேயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பல பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. அதில் தோனி தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

410
MS Dhoni

MS Dhoni

இதுவரையில் 262 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி 5,218 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 84* ரன்கள் எடுத்துள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

510
MS Dhoni Farewell Day?

MS Dhoni Farewell Day?

தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

610
MS Dhoni IPL Retirement?

MS Dhoni IPL Retirement?

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் சிஎஸ்கே 6 போட்டியிலும், ராஜஸ்தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

710
Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

ஒட்டு மொத்தமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 70 போட்டிகளில் 49 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 20 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

810
Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

இந்த சீசனில் முதல் முறையாக இரு அணிகளும் இந்தப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் இருக்கும்படி சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியானது தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியுடன் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.

910
Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

சாதிக்க காத்திருக்கு வீரர்கள்:

மொயீன் அலி 5 பவுண்டரி அடித்தால் 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி அடித்தால் 400 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

டேரில் மிட்செல் 6 பவுண்டரி அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரி அடித்த வீரராவார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 1500 ரன்கள் எடுத்த வீரர் ஆவார்.

டிரெண்ட் போல்ட் தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

1010
Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals 61st Match

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷுபம் துபே, துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகீஷ் தீக்‌ஷனா.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
எம். எஸ். தோனி ஐபிஎல் ஓய்வு
ராஜஸ்தான் ராயல்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
சஞ்சு சாம்சன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved