பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பெறுமா சிஎஸ்கே? 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
IPL 2024 CSK vs RR 12 May 2024 live
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிவிட்டன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
CSK vs RR IPL 2024
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷுபம் துபே, துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
CSK vs RR IPL 2024
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகீஷ் தீக்ஷனா.
IPL 2024 CSK vs RR 12 May 2024 live
இதையடுத்து தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால், இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது உண்டு. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
CSK vs RR IPL 2024
ஒருவேளை இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சென்றுவிடும். அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
IPL 2024 CSK vs RR 12 May 2024 live
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இரு அணிகளும் 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் சிஎஸ்கே 6 போட்டியிலும், ராஜஸ்தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
CSK vs RR IPL 2024
ஒட்டு மொத்தமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 70 போட்டிகளில் 49 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 20 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.
IPL 2024 CSK vs RR 12 May 2024 live
இந்த சீசனில் முதல் முறையாக இரு அணிகளும் இந்தப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் இருக்கும்படி சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியானது தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CSK vs RR IPL 2024
இந்தப் போட்டியுடன் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக எக்ஸ் பக்கங்களில் தோனியின் ஓய்வு குறித்து வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் வைரலாகி வருகிறது.
CSK vs RR IPL 2024
சாதிக்க காத்திருக்கு வீரர்கள்:
மொயீன் அலி 5 பவுண்டரி அடித்தால் 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி அடித்தால் 400 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
டேரில் மிட்செல் 6 பவுண்டரி அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரி அடித்த வீரராவார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 1500 ரன்கள் எடுத்த வீரர் ஆவார்.
டிரெண்ட் போல்ட் தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.