தொடர் சிக்கலில் லியோ.. படத்தை வெளியிட மறுக்கும் முன்னணி திரையரங்குகள்? - தயாரிப்பாளர் லலித்துடன் பிரச்சனையா?
தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படம் தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள சில முக்கிய திரையரங்குகள், லியோ திரைப்படத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. பல மாநிலங்களில் காலை 4 மணிக்கு, சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சென்னையில் உள்ள ஏஜிஎஸ் மற்றும் ரோகினி போன்ற முக்கிய திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் லியோ படத்தை ரிலீஸ் செய்ய திடீரென தடை விதித்த கோர்ட்... காரணம் என்ன?
என்ன நடந்தது?
லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், படத்தின் பிரிண்ட் அந்தந்த திரையரங்குகளிடம் ஒப்படைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து முதல் ஒரு வார வசூலில், தயாரிப்பு நிறுவனம் 80 சதவீதமும், திரையரங்க உரிமையாளர்கள் 20% பிரித்துக் கொள்ளும் வண்ணம் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இதை சென்னை மற்றும் 9 மாவட்டங்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் மற்றும் பிற முக்கிய திரையரங்குகள் தங்களுக்கு இந்த ஒரு வார வசூலில் 40 சதவீத லாபம் வேண்டும் என்று இப்பொது போர்க்கோடி துக்கியுள்ளதாக கூறபடுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவன தரப்பில் 20 சதவிகித லாபம் தான் அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள சில முக்கிய திரையரங்குகள் லியோ படத்தை வாங்க மறுத்துள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிரபல AGS நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "விநியோகஸ்தருடனான விதிமுறைக சிக்கலால் லியோ பட முன்பதிவுகளைத் திறக்க முடியவில்லை. இதனால் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், பொறுமையாகக் காத்திருந்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளது அந்த நிறுவனம். அதேபோல கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கமும் லியோ படத்தை வெளியிட மருத்துள்ளதாக கூறப்படுகிறது.
லியோ படம் வெளியாக இடையில் ஒரே ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் லியோ திரைப்படத்திற்கு பல சிக்கல்கள் வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.