Rathnam OTT Release : திரையரங்கில் கூட்டமில்லை... OTTக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட விஷாலின் ரத்னம்..!
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படத்திற்கு தியேட்டரில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.
Rathnam
கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் பிஸ்தா இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஹரி, இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பின்னர் தாமிரபரணி, வேல், ஆறு, சிங்கம் என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து டாப் இயக்குனராக உயர்ந்தார் ஹரி. இருப்பினும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சாமி ஸ்கொயர், சிங்கம் 3 போன்ற படங்கள் பெரியளவில் வெற்றியடையவில்லை.
Vishal, Hari
இதனால் கம்பேக் கொடுக்கும் முனைப்போடு நடிகர் விஷால் உடன் கூட்டணி அமைத்த ஹரி, அவரை வைத்து ரத்னம் படத்தை இயக்கினார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் ரத்னம் படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் முனைப்போடு விஷால் - ஹரி கூட்டணி களமிறங்கியது. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... AR Rahman : பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம்... இளையராஜாவை மறைமுகமாக சாடினாரா ஏ.ஆர்.ரகுமான்?
Rathnam Movie Box Office
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி திரைக்கு வந்தது. அன்றைய தினம் இப்படத்துக்கு போட்டியாக எந்த பெரிய படமும் ரிலீஸ் ஆகாததால் ரத்னம் படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு படத்தின் திரைக்கதை இல்லாததால், ரத்னம் படம் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. இப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் ரூ.20 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது.
Rathnam Movie OTT release
ஆனால் அதற்கு போட்டியாக கடந்த வாரம் ரிலீஸ் ஆன அரண்மனை 4 திரைப்படம் மூன்றே நாட்களில் ரூ.18 கோடி வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. அரண்மனை 4 படத்தின் ஆதிக்கத்தால் ரத்னம் படத்தில் வசூல் டல் அடித்துள்ளது. இதன்காரணமாக இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி உள்ள அமேசான் பிரைம் நிறுவனம் அப்படத்தை வருகிற மே 24ந் தேதி ஓடிடியில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் செல்லும் அரண்மனை 4... கோடி கோடியாய் குவியும் வசூல்; 3 நாளில் இம்புட்டு கலெக்ஷனா?