கர்ப்பத்தை அறிவித்த பின்.. கணவர் ரன்வீருடன் ஏர்போர்ட் வந்த தீபிகா படுகோன்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
பிரபல நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் தகவலை இன்று சமூக வலைத்தளம் மூலம் உறுதி செய்த நிலையில், இவரது லேட்டஸ்ட் ஏர்போர்ட் புகைப்பங்கள் வைரலாகி வருகிறது.
Deepika Padukone Airport Photos
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். கடந்த 2006-ஆம் ஆண்டு 'ஐஸ்வர்யா' என்கிற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஓம் ஷாந்தி ஓம்' என்கிற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
Deepika Padukone Airport Photos
இந்த படத்தின் வெற்றி இவரை பாலிவுட் திரையுலகில், பல முன்னணி நடிகர்களால் அதிகம் தேடப்படும் நடிகையாக மாற்றியது. இந்த படத்திற்கு பின்னர், ரன்வீர் கபூர், சைப் அலிகான், அக்ஷய் குமார், ஆதித்யா சோப்ரா, அமீர் கான், ஹ்ரித்திக் ரோஹன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.
Deepika Padukone Airport Photos
2013 ஆம் ஆண்டு, ரன்வீர் சிங் ஜோடியாக 'ராம் லீலா' படத்தில், நடிக்கும் போது... தீபிகா படுகோனுக்கும், ரன்வீர் சிங் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அதிகம் பேசப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 'பாஜிராவ் மஸ்தானி', 'பத்மாவத்' போன்ற படங்களிலும் நடித்தனர்.
Deepika Padukone Airport Photos
பின்னர் காதலை வெளிப்படுத்தாமல் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், பின்னர் வெளிப்படையாக காதலை அறிவித்து, கடந்த 2018-ம் திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
Deepika Padukone Airport Photos
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஹாட் அண்ட் செக்சியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த தீபிகா படுகோனே, கடந்த ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அறியப்பட்டார்.
Deepika Padukone Airport Photos
குறிப்பாக கடந்த ஆண்டு இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்த பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களுமே 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
Deepika Padukone Airport Photos
தற்போது இவர் ரித்திக் ரோஷனுடன் நடித்துள்ள பைட்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தவிர, பிரபாஸ் நடித்துள்ள கல்கி, மற்றும் Singham Again என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
Deepika Padukone Airport Photos
பரபரப்பாக ஒரு பக்கம் தீபிகா படுகோன் நடித்து வரும் நிலையில், இன்று காலை... சமூக வலைதள பக்கத்தில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். செப்டெம்பர் 2024 இவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் அறிவித்தனர் ரன்வீர் - தீபிகா ஜோடி.
Deepika Padukone Airport Photos
இந்த செய்தி வெளியான பின்னர், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை ஒருபுறம் தெரிவித்த நிலையில், தற்போது தன்னுடைய கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பை ஏர்போட்டுக்கு தீபிகா படுகோன் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.