MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மாடர்ன் ட்ரெஸ் போட்ட வண்ணத்துப்பூச்சியாய் மாறியா ஸ்ரீதேவி விஜயகுமார்.. வர்ணிக்க வார்த்தை தேடும் நெட்டிசன்கள்!

மாடர்ன் ட்ரெஸ் போட்ட வண்ணத்துப்பூச்சியாய் மாறியா ஸ்ரீதேவி விஜயகுமார்.. வர்ணிக்க வார்த்தை தேடும் நெட்டிசன்கள்!

விஜயகுமாரின் இளைய மகளான, ஸ்ரீதேவி விஜயகுமார் பிங்க் கலர் மாடர்ன் உடையில்... வளையவளைய போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை வருடிய கியூட் போட்டோஸ் ஷூட் புகைப்படங்கள் இதோ.. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 29 2024, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் கடைசி மகள் தான் ஸ்ரீதேவி. கடைக்குட்டி என்பதால், ஒட்டு மொத்த குடும்பத்திற்க்குமே இவர் தான் செல்லம். விஜயகுமாரின் ஆசை மகளும் இவர் தான். மற்ற பிள்ளைகள் ஏதாவது கேட்டால் வாங்கி கொடுக்க மறுக்கும் விஜயகுமார் ஸ்ரீதேவி எதை கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுவாராம் இதனை சில பேட்டிகளில் கூட ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

அதே போல் மூத்த மனைவியான முத்து கண்ணுவுக்கும்  ஸ்ரீதேவி மேல் தான் அதிக பிரியமாம். கவிதா, அனிதா, அருண் விஜய், வனிதா, ப்ரீத்தா என... அனைவருக்குமே செல்ல தங்கையாக, ஒரு குட்டி தேவதையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.

'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்தது இவர் தான்! உங்க மூஞ்சி செட் ஆகலனு திருப்பி அனுப்பிய சோகம்!

38

1986-ஆம் ஆண்டு பிறந்த இவர், தன்னுடைய 5 வயதிலேயே... தமிழ் சினிமாவில் ரிச்சா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  இதை தொடர்ந்து அம்மா வந்தாச்சு, டேவிட் அங்கிள், தெய்வ குழந்தை, ஆவாரம்பூ, சுகமான சுமைகள் போன்ற சில படங்களில் நடித்தார்.

48

2002-ஆம் ஆண்டு, பிரபாஸ் ஹீரோவாக நடித்த 'ஈஸ்வர்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அஜித்தின் மச்சினன் ரிச்சர்டு ஹீரோவாக நடித்த 'காதல் வைரஸ்' படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார். 

நடிகர் அஸ்வின் ககுமனுவின் தாயார் இந்த நடிகையா? அவர் நடித்து வெளியான படத்தின் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

58

இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், இதை தொடர்ந்து ஸ்ரீதேவி நடித்த பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்ததால்... தன்னை தேடி வந்த பல படங்களின் வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார்.

68

முன்னணி நடிகையாக இருக்கும் போதே... 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர், ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு தற்போது ரூபிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். 

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஹீரோ! 'அன்பே வா' டெல்னா நடிக்கும் புதிய சீரியலுக்கு பூஜை போட்டாச்சு!

78

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருக்கிறார் ஸ்ரீதேவி.

88

மேலும் அவ்வப்போது தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள, இவர் தற்போது பிங்க் கலர் உடையில்...வண்ணத்துப்பூச்சி போல் வளையவளைய போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Kanguva Actors Salary: சூர்யா முதல்.. யோகி பாபு வரை.. 'கங்குவா' படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்! முழு விவரம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
அருண் விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved