- Home
- Gallery
- வான வேடிக்கை காட்டிய ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் – ஜெட் வேகத்தில் உயர்ந்த ஸ்கோர் – ஆர்சிபி 187 ரன்கள் குவிப்பு!
வான வேடிக்கை காட்டிய ரஜத் படிதார், வில் ஜாக்ஸ் – ஜெட் வேகத்தில் உயர்ந்த ஸ்கோர் – ஆர்சிபி 187 ரன்கள் குவிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது.

IPL 2024 RCB vs DC 12 May 2024 live
சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ரிஷப் பண்டிற்கு விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டார்.
IPL 2024 RCB vs DC 12 May 2024 live
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்ஷர் படேல் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் டெல்லி அணியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக குமார் குஷாக்ரா இடம் பெற்றார். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
IPL 2024 RCB vs DC 12 May 2024 live
இதையடுத்து விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டூப்ளெசிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய விராட் கோலி 27 ரன்களில் வெளியேறினார்.
IPL 2024 RCB vs DC 12 May 2024 live
அதன் பிறகு ரஜத் படிதார் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி ரன்கள் குவிக்க, ஆர்சிபி ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதில், படிதார் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்களில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 41 ரன்களில் வெளியேறினார்.
IPL 2024 RCB vs DC 12 May 2024 live
அதன் பிறகு ரன் ரேட் குறைந்தது. மகிபால் லோம்ரார் 13 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0, ஸ்வப்னில் சிங் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் கேமரூன் க்ரீன் 32 ரன்கள் எடுக்கவே ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.
IPL 2024 RCB vs DC 12 May 2024 live
பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கலீல் அகமது, ரஷீக் தர் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
IPL 2024 RCB vs DC 12 May 2024 live
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், மகிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரண் சர்மா, முகமது சிராஜ், லாக்கி ஃபெர்குசன், யாஷ் தயாள்.
IPL 2024 RCB vs DC 12 May 2024 live
டெல்லி கேபிடல்ஸ்:
ஜாக் ஃபிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), ஷாப் ஹோப், குமார் குஷாக்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் படேல் (கேப்டன்), குல்தீப் யாதவ், ரஷீக் தர் சலாம், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.