இவங்க தான் பிரதீப் ஆண்டனி காதலியா? சும்மா ஹீரோயின் போல இருக்காங்களே... முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட... பிரதீப் ஆண்டனி தன்னுடைய காதலியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் பிரதீப் ஆண்டனி.
இவர் அருவி, யாழ், டாடா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில்... கவின் கலந்து கொண்டு விளையாடிய போது, கவினின் நண்பனாக உள்ளே வந்த பிரதீப் ஆண்டனி, வந்த வேகத்தில் அவரை கன்னத்தில் அறைந்து நீ விளையாட வந்து விட்டு, ஏன் கண்ட விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறாய் என கேட்டதால் அப்போது அதிகம் பேசப்பட்டார்.
கவினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தொடர்ந்து முயற்சி செய்து வந்த இவர்... ஒருவழியாக பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிரதீப்பின் ஸ்டாட்டர்ஜி மற்றும் நேர்மையான விளையாட்டு ஒரே மாதத்தில் இவருக்கு லட்ச கணக்கான ரசிகர்களை உருவாக்கியது. எனவே இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டில் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக பிரதீப் இருந்தார்.
ஆனால் அவர் மீது, பெண் போட்டியாளர்கள் சிலர், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத புகார்களை வைத்ததால்... பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார் கமல். இதனால் கமல்ஹாசனும் அதிகம் விமர்சனங்களுக்கு ஆளாகி, கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் சில காரணங்களை கூறினாலும், அவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
Suriya: விபத்தில் சிக்கி நூல் இழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா போட்ட உருக்கமான பதிவு!
எனவே பிக்பாஸ் ரசிகர்கள் பலர் மீண்டும் பிரதீப் ஆண்டனி, பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். ஆனால் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்டதால்... பிரதீப் வீட்டுக்குள் வருவது, கடினம் என்றே கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது பல முறை தன்னுடைய காதலி குறித்து பேசி இருந்தார் பிரதீப். தற்போது முதல் முறையாக தன்னுடைய காதலியுடன் சேர்ந்து, புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். பிரதீப்பின் காதலியை பார்த்து ரசிகர்கள் சும்மா, ஹீரோயின் போல் இருக்காங்களே என தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள்.
Suriya: விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா! மருத்துவமனையில் அனுமதி.!