Sneha: சினேகா குடும்பத்தில் நடந்த திருமணம்..! குடும்பத்தோடு வெளியிட்ட மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்!
நடிகை சினேகா குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில்... எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை சினேகா, கல்லூரி காலங்களிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த இவர், படிப்படியாக பட வாய்ப்புகளை தேட துவங்கிய இவர், ஒருவழியாக மலையாளத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு அறிமுகமானார்.
இதை தொடர்ந்து அதே ஆண்டு, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக என்னவளே படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் இவருக்கு தமிழில் தோல்விமுகம் என்றாலும்... பின்னர் தன்னுடைய அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது.
Suriya: விபத்தில் சிக்கி நூல் இழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா போட்ட உருக்கமான பதிவு!
அதன்படி விஜய், கமல், அஜித், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, புதுப்பேட்டை, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பவானி, போன்ற படங்கள் தற்போது வரை பல ரசிகர்கள் உள்ளனர்.
சில காதல் சர்ச்சைகளில் சிக்கிய நடிகை சினேகா, 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவை காதலிக்க துவங்கினார். பின்னர் இந்த ஜோடி கடந்த 2012 ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன், மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நட்சத்திர ஜோடியின் காதலுக்கு அடையாளமாக விகான் என்கிற மகனும், ஆதியந்தா என்கிற மகளும் உள்ளனர். திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட பிறகும் தொடர்ந்து, திரையுலகில் சினேகா கவனம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தில் நடிக்கவும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய போட்டோ ஷூட் போன்றவற்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இவரின் குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்வு நடித்துள்ளது. அதில் குடும்பத்துடன் மேட்சிங்... மேட்சிங்... உடையில் கலந்து கொண்டுள்ள சினேகா, குடும்பத்தினர் அனைவருடனும் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D