Suriya: விபத்தில் சிக்கி நூல் இழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா போட்ட உருக்கமான பதிவு!
'கங்குவா' படத்தின் படபிடிப்பில் பலத்த காயமடைந்த நடிகர் சூர்யா, விபத்துக்கு பின்னர் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த நிலையில்... சென்னையில் உள்ள பிவிஆர் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதில் நடிகர் சூர்யா சூர்யாவின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் போது, படபிடிப்பில் பயன்படுத்தப்பட்ட ரோப் கேமரா திடீரென கீழே விழுந்ததில், நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் பலமான காயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு சூர்யா அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாக்கின.
ஏற்கனவே சூர்யாவுக்கு பெரிய காயங்கள் இதுவும் இல்லை என்றும், தலையில் விழுவதற்கு மிகவும் குறையான தூரமே இருந்ததால், சூர்யா நூல் இழையில் உயிர் தப்பியதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த சம்பவம், சூர்யா ரசிகர்கள் மத்தியில் திரையுலகினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ரசிகர்கள் பல தொடர்ந்து சூர்யாவுக்கு என்ன ஆனது? என சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து நலம் விசாரித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், சற்று முன்னர் சூர்யாவே.. தன்னுடைய உடல்நிலை குறித்து எக்ஸ் தலத்தில் பகிர்துகொண்டுள்ளார். அதில் கூறி இருபதாவது, "அன்பான நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன், என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.